தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு இவர்கள் தான் கேப்டன்!

Updated: 20 August 2019 13:53 IST

ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 29ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹப்பில் நடக்கவுள்ளது.

Shreyas Iyer, Manish Pandey To Lead India A Teams Against South Africa A
ஸ்ரேயாஸ் ஐயர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தொடர்ந்து இரண்டு அரைசதமடித்தார். © AFP

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே இருவரும் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு கேப்டனாக இருப்பார்கள் என்று பிசிசிஐ கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. தலைமை தேர்வு குழுவினர் மும்பையில் சந்தித்து, அடுத்த ஐந்து ஒருநாள் போட்டிக்கான இந்திய ஏ அணியை தேர்வு செய்தனர். முதல் இரண்டு போட்டிகளுக்கு பாண்டே கேப்டனாகவும், மற்ற இரண்டு போட்டிகளுக்கு ஐயர் கேப்டனாகவும் இருப்பார்கள்.

ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 29ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹப்பில் நடக்கவுள்ளது.

24 வயதான டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தொடர்ந்து இரண்டு அரைசதமடித்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் ஆடிய பாண்டே, சிறப்பாக செயல்பட தவறினார்.

ஐந்து ஒருநாள் போட்டிகளுக்காக சும்பன் கில், அன்மோல்ப்ரீத் சிங், நிதீஷ் ராணா, ரிக்கி புய், விஜய் சங்கர், ஷிவம் தூபே, அக்ஸர் பட்டேல் மற்றும் ஷ்ரதுல் தாகூர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய ஏ அணி:

மணீஷ் பாண்டே (கேப்டன்), ருதுராஜ் கெக்வாட், சுப்மன் கில், அன்மோல்ப்ரீத் சிங், நிதீஷ் ராணா, ரிக்கி புய், இஷன் கிஷான்(விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஷிவம் தூபே, க்ருணால் பாண்ட்யா, அக்ஸர் பட்டேல், யுவேந்திர சஹால், ஷ்ரதுல் தாகூர், தீபக் சஹார், கலீல் அகமது.

கடைசி இரண்டாவது போட்டிக்கான இந்திய ஏ அணி:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சுப்மன் கில், பிரசாந்த் சோப்ரா, அன்மோல்ப்ரீத் சிங், ரிக்கி புய், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, விஜய் சங்கர், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டேல், ராகுல் சஹார், ஷ்ரதுல் தாகூர், துஷர் தேஷ்பண்டே, இஷான் போரெல்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு இவர்கள் தான் கேப்டன்!
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு இவர்கள் தான் கேப்டன்!
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!
டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!
Advertisement