''இன்னொரு சரிவை சந்திக்காமல் இருக்க‌ நான் 20வது ஓவர் வரை ஆடவேண்டும்'' ஸ்மிருதி மந்தனா!

Updated: 07 February 2019 14:17 IST

மந்தனா 34 பந்தில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மந்தனா அவுட் ஆகும் போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 102

Smriti Mandhana Says, "I
மந்தனா 34 பந்தில் 58 ரன்கள் குவித்தும், இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. © AFP

இந்திய பெண்கள் அணியின் துவக்க வீரர் ஸ்ம்ருதி மந்தனா, தான் முழுமையாக 18 முதல் 20 ஓவர் வரை டி20 போட்டிகளில் ஆட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது அணியை இன்னோரு சரிவை சந்திக்க வைக்காது என்றும் கூறியுள்ளார். நேற்று நியூசிலாந்துடன் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்தியா 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மந்தனா 34 பந்தில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மந்தனா அவுட் ஆகும் போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 102. ஆனால் நிலையான மிடில் ஆர்டர் வீராங்கனைகள் இல்லாததால் அடுத்த 34 ரன்களை சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. அதனால் மந்தனா 18 முதல் 20 ஓவர் வரை ஆடினால் அணியின் சரிவை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல் நான்கு வீரர்கள் நன்றாக ஆடி அடித்தளம் அமைத்து கொடுத்தால் சேஸிங் எளிமையாக அமையும் என்றார். மிடில் ஆர்டர் பலம் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

நியூஸிலாந்துடனான முதலாவது டி20 போட்டியில் 24 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். இது டி20 போட்டிகளில் இந்திய பெண்கள் அணி வீராங்கனையின் அதிவேக அரைசதமாகும். 58 ரன்கள் எடுத்த நிலையில் கெர் பந்தில் ஆட்டமிழந்தார் அப்போது இந்தியா 102 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வந்தது. மந்தனாவின் இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.ஆனால் மந்தனா ஆட்டமிழந்த  பிறகு இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து 34 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் முதல் டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. 

அணியாக மீண்டும் இந்த தொடரில் 0-1 என்ற நிலையிலிருந்து மிஈன்டு வருவோம். அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார். அடுத்த போட்டி ஆக்லாந்தில் நாளை நடக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • மந்தனா எடுத்த 58 ரன்களில் 7 பவுன்ரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்
  • முதல் டி20 போட்டியை 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது
  • முதலாவது டி20 போட்டியில் 24 பந்துகளில் அரைசதமடித்தார் மந்தனா.
தொடர்புடைய கட்டுரைகள்
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
பெண்கள் டி20 சேலஞ்சுக்கு மிதாலி,மந்தனா, கவுர் கேப்டன்!
மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!
மே 6ல் துவங்குகிறது பெண்கள் டி20 லீக் தொடர்!
"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!
"அணிக்கு மிதாலியின் அனுபவம் தான் ப்ளஸ்" - கேப்டன் மந்தனா!
பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
இங்கிலாந்து டி20 தொடர்: பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்!
இங்கிலாந்து டி20 தொடர்: பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்!
Advertisement