"நல்லவேளை விரல் உடையவில்லை" - 3வது ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி!

Updated: 15 August 2019 14:54 IST

27வது ஓவரின் போது வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் வீசிய பந்து கோலியின் கையில் பட்டது. அதன் பின் அணியின் பிசியோ அணியினர் அவருக்கு முதலுதவி செய்தனர்.

Virat Kohli Quashes Thumb Injury Scare After ODI Triumph Over West Indies
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், விராட் கோலிக்கு வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், விராட் கோலிக்கு வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. 27வது ஓவரின் போது வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் வீசிய பந்து கோலியின் கையில் பட்டது. அதன் பின் அணியின் பிசியோ அணியினர் அவருக்கு முதலுதவி செய்தனர். போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி காயம் குறித்து பேசினார், "எலும்பு முறிவு என்று நான் அறியவில்லை, தெரிந்திருந்தால் என்னால் தொடந்து பேட்டிங் செய்திருக்க முடியாது. நகப் பிளவு மட்டும் தான்". என்றார்.
 
போட்டி முடிந்த பின் பத்திரியாளர் சந்திப்பில் விரல் குறித்து கோலியிடம் கேட்கபட்ட போது, அவர், "நல்ல வேளையாக விரல் உடையவில்லை. என் கையில் பந்து பட்ட போது, மிகவும் மோசமாக வலி ஏற்பட்டது. ஆனால், விரல் உடையவில்லை. அதனால், முதல் டெஸ்ட் போட்டிக்கு நான் தயாராக இருப்பேன் என்று நினைக்கிறேன்."

மூன்றாவது ஒருநாள் போட்டியில் கோலி 99 பந்தில் 114 ரன்கள் எடுத்தார். அதற்கு முன்னதாக இரண்டாவது போட்டியில் 120 ரன்கள் குவித்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியை இந்திய அணி டக்வொர்த் லூயில் முறைபடி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சச்சின் டெண்டுல்கரின் சத சாதனைக்கு அருகில் சென்றுள்ளார் கோலி. சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் ஏழு சதங்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. 2000ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்க பாண்டிங்கின் 18,962 ரன்களை முறியடித்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இந்தியா.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்குகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
Advertisement