‘புற்று நோயால் அவதிப்பட்ட போது எப்படி உணர்ந்தேன்?’- யுவராஜ் சிங் உருக்கம்

Updated: 12 October 2018 12:47 IST

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இடம் பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக இருப்பவர் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்

Yuvraj Singh Recalls Time During Cancer, Says "Was A Dark Moment" Of His Life
யுவராஜ் கடைசியாக 2017-ல் இந்திய அணியில் இடம் பெற்றார் © AFP

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இடம் பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக இருப்பவர் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு, உலக கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்று நோயால் அவதிப்பட்ட போது, எப்படிப்பட்ட உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டார் என்பது குறித்து யுவராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். 

2011 உலக கோப்பைத் தொடரை இந்தியா வெல்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் யுவராஜ். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சாதித்த அவர், தொடர் நாயகன் பட்டத்தையும் தட்டிச் சென்றார். பேட்டிங்கில் உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் போது தான் புற்று நோய் இருக்கும் சோக செய்தி தெரிந்தது. 

யுவராஜுக்கு புற்று நோய் இருப்பதும் அதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதும் தெரியபடுத்தப்பட்டது. கிரிக்கெட்டிலிருந்து விலகி கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டார் யுவராஜ். சிகிச்சையை முடித்து, அவர் 2012 ஆம் ஆண்டு, இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தார். இந்திய அணிக்காக அவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு தான் விளையாடினார். மீண்டும் அவர் அணியில் இடம் பெற போராடிக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் புற்று நோயால் அவதிப்பட்ட போது எப்படிப்பட்ட உணர்ச்சிகளால் தவித்தார் என்பது குறித்து, ‘உலக கோப்பையில் வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. எனக்கு உலக கோப்பை குறித்து இருந்த அனைத்த சந்தோஷங்களையும் புற்று நோய் குறித்தான செய்தி பறித்தது. எனது வாழ்க்கையின் மிக இருண்ட பகுதி அது. 

உலக கோப்பையில் வெற்றி பெற்று, தொடர் நாயகன் விருதை வாங்கும் போது, வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தேன். ஆனால், அடுத்த கணமே சறுக்கி விழுந்தேன். அது தான் வாழ்க்கை. உங்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கப் படாது. வருவதை ஏற்றுக் கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும்’ என்று உருக்கமாக பேசியுள்ளார். 


 

Comments
ஹைலைட்ஸ்
  • 2011 உலக கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ் உறுதுணையாக இருந்தார்
  • 2011 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதை யுவராஜ் வாங்கினார்
  • கடைசியாக அவர் இந்திய அணியில் 2017-ல் இடம் பெற்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
Web Series-ல் மனைவி ஹசல் கீச்சுடன் நடிக்கவிருக்கும் யுவராஜ் சிங்!
Web Series-ல் மனைவி ஹசல் கீச்சுடன் நடிக்கவிருக்கும் யுவராஜ் சிங்!
யுவராஜ் சிங் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர்!
யுவராஜ் சிங் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர்!
“என்னைப் போன்ற வீரர் இவர்” - ஆஸி.வீரர் குறித்து பேசிய டெண்டுல்கர்!
“என்னைப் போன்ற வீரர் இவர்” - ஆஸி.வீரர் குறித்து பேசிய டெண்டுல்கர்!
"சிக்ஸர் கிளப்" - டாம் அண்ட் ஜெர்ரி படத்துடன் லியோ கார்ட்டரை வரவேற்ற யுவராஜ் சிங்!
"சிக்ஸர் கிளப்" - டாம் அண்ட் ஜெர்ரி படத்துடன் லியோ கார்ட்டரை வரவேற்ற யுவராஜ் சிங்!
"யுவராஜ் சிங், நான், சேவாக் 2015 உலகக் கோப்பையை விளையாடியிருக்க வேண்டும்" - ஹர்பஜன் சிங்
"யுவராஜ் சிங், நான், சேவாக் 2015 உலகக் கோப்பையை விளையாடியிருக்க வேண்டும்" - ஹர்பஜன் சிங்
Advertisement