Listen to the latest songs, only on JioSaavn.com
 

''சிறப்பான கூட்டுமுயற்சி'' வரலாற்று வெற்றிக்கு வாழ்த்து சொன்ன சோயப் அக்தர்!

Updated: 09 January 2019 13:36 IST

''வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள்" என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் இந்திய அணியை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

India vs Australia: Shoaib Akhtar Praises Virat Kohlis Team India For A Historic Series Win vs Australia, Says "It Was A Great Effort"
72 வருட டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய கேப்டன் விராட் கோலிதான். © AFP

விராட் கோலி  தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இது குறித்து பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் ''வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நடந்த கடினமான கிரிக்கெட் தொடர்களில் இதுவும் ஒன்று. ஆஸ்திரேலியாவை கூட்டு முயற்சியில் சிறப்பாக வீழ்த்தியுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

72 வருட டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய கேப்டன் விராட் கோலிதான். 30 வயதான இந்திய கேப்டன் கோலி, இந்தத் தொடரில் ஒரு சதம் உட்பட 282 ரன்களை குவித்தார். இதை விராட் கோலி "எனது வாழ்க்கையில் ஒரு வரலாற்று தருணம். இவ்வளவு திறமையான வீரர்களை வழிநடத்துவதற்கு பெருமை கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

"இந்தக் கலாச்சாரத்தை, அணிக்குள் கொண்டு வர நாங்கள் ஒரு வருடமாக கடினமாக உழைத்து வந்தோம். இதற்கான செயல்கள் நான் முதல்முறை இதே மண்ணில் கேப்டனானதிலிருந்து துவங்கியது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் நான் பெருமையாக உணர்கிறேன். இந்த வீரர்கள் கேப்டனை பெருமையாக உணர வைக்கிறார்கள். நிச்சயமாக இந்த வெற்றிக்கு இந்த அணி முழு தகுதி கொண்டது" என்று பரிசளிப்பு நிகழ்ச்சியில் சொன்னார் கோலி.

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் '' இந்த வெற்றிகரமான அணியில் ஒருவனாக இருப்பது பெருமிதம் கொள்ள வைக்கிறது. இப்போதும், எப்போதும் இது வெறும் அணி அல்ல, குடும்பம்.'' என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ''விராட் மற்றும் ரவி சாஸ்த்ரிக்கு வாழ்த்துக்கள். அவர்களது மிகப்பெரிய சாதனை இது. கடைசி இரண்டு டெஸ்ட்களில் அவர்கள் எங்களை முழுமையாக வென்று விட்டார்கள்" என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“சாதி, மதத்தை விடுத்து மனிதர்களாக செயல்படுங்கள்” - மக்களிடம் சோயிப் அக்தர் வேண்டுகோள்!
“சாதி, மதத்தை விடுத்து மனிதர்களாக செயல்படுங்கள்” - மக்களிடம் சோயிப் அக்தர் வேண்டுகோள்!
“பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சிறந்த கண்டுபிடிப்பு பாபர் அசாம்” - சோயிப் அகதர்!
“பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சிறந்த கண்டுபிடிப்பு பாபர் அசாம்” - சோயிப் அகதர்!
“நட்சத்திர வீரர்களை இப்படியா நடத்துவீர்கள்?” - பிசிபியை சாடிய சோயிப் அக்தர்!
“நட்சத்திர வீரர்களை இப்படியா நடத்துவீர்கள்?” - பிசிபியை சாடிய சோயிப் அக்தர்!
"அவர் தலைமுடியைவிட என்னிடம் பணம் அதிகம் இருக்கும்" - சேவாக்கை வம்பிழுத்த அக்தர்!
"அவர் தலைமுடியைவிட என்னிடம் பணம் அதிகம் இருக்கும்" - சேவாக்கை வம்பிழுத்த அக்தர்!
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
Advertisement