கரீபியின் போட்டியில் ஆடும் முதல் இந்தியராகிறார் இர்ஃபான் பதான்!

Updated: 17 May 2019 15:44 IST

இர்ஃபான் பதான் பெயர் பட்டியலில் உள்ளது . எந்த அணியாவது அவரை அணியில் எடுத்தால் அவர் இந்த பெருமையை பெறுவார்.

Irfan Pathan Becomes First Indian To Sign Up For Caribbean Premier League Players Draft
இர்ஃபான் பதான், டி20 போட்டிகளில் இதுவரை 177 போட்டிகளில் 173 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். © AFP

2019 கரீபியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் ஆடவிருக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இர்ஃபான் பதான் பெறவுள்ளார். இந்த போட்டி தொடர் செப்டம்பர் 4 துவங்கி அக்டோபர் 12 வரை நடைபெறவுள்ளது. அவரது பெயர் பட்டியலில் உள்ளது . எந்த அணியாவது அவரை அணியில் எடுத்தால் அவர் இந்த பெருமையை பெறுவார். அதுமட்டுமின்றி வெளிநாட்டில் நடக்கும் ஒரு டி20 லீக் போட்டியில் ஆடும் முதல் வீரரும் இவர்தான். இதற்கான வரைவில் 20 நாடுகளை சேர்ந்த 536 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சிபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்புள்ள போட்டியாக மாறி வருகிறது என்று சிபிஎல்லின் இயக்குநர் மைக்கேல் ஹால் தெரிவித்துள்ளார். 

அலெக்ஸ் ஹால்ஸ், ரஷித் கான், ஷகிப் அல் ஹாசன், ஆர்ச்சர் மற்றும் டுமினி ஆகியோரும், கரீபியன் வீரர்களான ரஸல், நரேன், ஹெட்மேயர், ஹோப் ஆகியோரும் இடம்பெறுள்ளனர். 

அனைத்து உரிமையாளர்களும் 6 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் அல்லது புதிய வீராரக எடுத்து கொள்ளலாம்.

அணியில் தக்க வைக்கும் வீரர்களில் 3-4 மேற்கிந்திய தீவுகள் வீரர்களை தக்க வைக்க வேண்டும்.

4 மேற்கிந்திய தீவுகள் வீரர்களை தேர்வு செய்தால் ஒரு வெளிநாட்டு வீரரை கூட தக்க வைக்க முடியாது. இல்லையெனில் ஒரு வெளிநாட்டு வீரரை தக்க வைக்கலாம்.

ஒரு அமெரிக்க வீரரை தக்க வைக்கலாம் அல்லது புதிதாக எடுக்கலாம்.

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 2018 போட்டி தொடரை வென்றது.

Comments
ஹைலைட்ஸ்
  • கரீபியன் ப்ரிமியர் லீக் போட்டியில் ஆடவிருக்கும் முதல் வீரர் இர்ஃபான்பதான்
  • இந்த போட்டி தொடர் செப்டம்பர் 4 துவங்கி அக்டோபர் 12 வரை நடைபெறவுள்ளது
  • வெளிநாட்டில் நடக்கும் டி20 லீக் போட்டியில் ஆடும் முதல் வீரரும் இவர்தான்
தொடர்புடைய கட்டுரைகள்
கரீபியின் போட்டியில் ஆடும் முதல் இந்தியராகிறார் இர்ஃபான் பதான்!
கரீபியின் போட்டியில் ஆடும் முதல் இந்தியராகிறார் இர்ஃபான் பதான்!
ஜிம்மில் தந்தை இர்பான் பதானுக்கு உதவி செய்யும் மகன் இம்ரான் கான்
ஜிம்மில் தந்தை இர்பான் பதானுக்கு உதவி செய்யும் மகன் இம்ரான் கான்
Advertisement