"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ

Updated: 15 May 2019 11:25 IST

29 வயதாக பாரிஸ்ட்டோ, இந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஆடிய 10 போட்டிகளில் 445 ரன்களை குவித்துள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய அவரின் சராசரி 55.62.

"IPL Helped In Raising My Game", Says England Century-Maker Jonny Bairstow
பாரிஸ்ட்டோ 93 பந்தில் 128 ரன்கள் எடுத்தார். ஐந்து ஒருநாள் தொடரில், மூன்றாவது போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. © AFP

ஜானி பாரிஸ்ட்டோ, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 100 ரன்களை கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருடன் விளையாடியது அவருக்கு சிறந்த பயிற்சியாக இருந்ததாக கூறியுள்ளார். பாரிஸ்ட்டோ 93 பந்தில் 128 ரன்கள் எடுத்தார். ஐந்து ஒருநாள் தொடரில், மூன்றாவது போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. "நாம் விளையாடும் அணியிடம் இருந்தும், உடன் விளையாடும் வீரர்களிடம் இருந்தும் பல வித்தியாசமான விஷயங்களை கற்றுகொள்ளலாம்" என்றார் பாரிஸ்ட்டோ.

29 வயதாக பாரிஸ்ட்டோ, இந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஆடிய 10 போட்டிகளில் 445 ரன்களை குவித்துள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய அவரின் சராசரி 55.62.

"விளையாட்டை ப்ளான் செய்வது போன்ற விஷயங்களும் இதில் அடங்கும்" என்றார்.

"வார்னர் விளையாடுவது முற்றிலும் மாறுப்பட்டு இருக்கும். அதை எப்படி விளையாடுகிறார் என்பதை கற்றுகொள்ளதான் இதில் அவசியமாக உள்ளது. எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நேரத்தில், அழுத்தத்தை கட்டுப்படுத்தி விளையாட்டில் முழு கவனத்தை செலுத்துவது போன்றவற்றை கற்றுகொள்ளலாம்" என்றார்.

ஒருநாள் போட்டியில் பாரிஸ்ட்டோ தன்னுடைய ஏழாவது சதத்தை நிறைவு செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு இலக்காக 359 ரன்கள் வைக்கப்பட்டது. 128 ரன்கள் எடுத்த பாரிஸ்ட்டோ இலக்கை 31 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றியை அடைய செய்தார்.

"அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் 160 அல்லது 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற போட்டி உள்ளது. அதனால் தான் இந்த இலக்கை எட்ட முடிந்தது" என்றார்.

"எங்கள் அனைவருக்குள்ளும் ஒரு போட்டி எப்போதும் உள்ளது. அது நல்லதாக இருக்கிறது. இந்த போட்டி மனமான்மை அணியை சிறப்பாக செயல்பட வைக்கும்" என்று கூறினார் பாரிஸ்ட்டோ.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கபில் தேவ்வின் 36 வருட சாதனையை உடைத்தார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்!
கபில் தேவ்வின் 36 வருட சாதனையை உடைத்தார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்!
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
அறிமுக ஐபிஎல் தொடரிலேயே அசத்திய ஜானி பாரிஸ்டோ!
அறிமுக ஐபிஎல் தொடரிலேயே அசத்திய ஜானி பாரிஸ்டோ!
தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!
தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!
ஐ.பி.எல். 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது ஐதராபாத் சன் ரைசர்ஸ்!! #Highlights
ஐ.பி.எல். 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது ஐதராபாத் சன் ரைசர்ஸ்!! #Highlights
Advertisement