பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!

Updated: 04 May 2019 20:22 IST

ஐ.பி.எல். லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. டெல்லி அணி தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தானை இன்று வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Rishabh Pant Masterclass Guides Delhi Capitals To 5-Wicket Win Against Rajasthan Royals
அரை சதம் அடித்த ரிஷப் பன்ட் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். © BCCI/IPL

ரிஷப் பன்ட்டின் பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தானை வென்று 2-வது இடத்திற்கு டெல்லி இன்று முன்னேறியது. 

ஐ.பி.எல். இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்களை எடுத்தது. 

அதிகபட்சமாக ரியான் பராக் 50 ரன்களை எடுத்தார். டெல்லி வீரர் இஷாந்த் சர்மாவின் கடைசி ஓவரில் மட்டும் ராஜஸ்தான் 18 ரன்களை எடுத்தது. ட்ரென்ட் போல்ட் வீசிய 20-வது ஓவரில் 2 சிக்ஸர்களை தட்டி ரியான் பராக் அணிக்கு கவுரவமான ஸ்கோரை எடுத்துக் கொடுத்தார். 

டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா 17 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின்னர் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆட்டத்தை தொடங்கியது. பிரித்வி ஷா, 8 ரன்களிலும், ஷிகர் தவான் 16 ரன்களிலும் வெளியேற அடுத்து வந்த ஷ்ரேயாஸ் 15 ரன்களை எடுத்தார். 

டெல்லி பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில், பன்ட் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தை ரன்களை குவித்தார். 38 பந்துகளை சந்தித்த அவர் 53 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசியாக 16.1 ஓவரில் 121 ரன்களை எடுத்து டெல்லி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால், டெல்லி 3-வது இடத்திற்கு சென்று விடும். 

Comments
ஹைலைட்ஸ்
  • பாயின்ட்ஸ் டேபிளில் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் டெல்லி
  • நாளைய போட்டியில் மும்பை வென்றால் 3வது இடத்திற்கு டெல்லி செல்லும்
  • இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது ஐ.பி.எல். தொடர்
தொடர்புடைய கட்டுரைகள்
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!
டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!
Advertisement