ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் கோலி-தோனி மோதல்!

Updated: 19 February 2019 19:19 IST

ஐபிஎல் தொடரின் 12வது தொடர் வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.

IPL 2019 Schedule For First Two Weeks Announced, CSK To Play RCB In Opener On March 23
தேர்தலை பொறுத்து அட்டவணையில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. © AFP

ஐபிஎல் தொடரின் 12வது தொடர் வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ளது. முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன. முழு போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்படாததற்கு காரணம், இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுவதே ஆகும். தேர்தலை பொறுத்து அட்டவணையில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், உள்ளூர் அதிகாரிகளுடன் பேசி தேர்தல் தேதிகளை கணக்கில் கொண்டு போட்டிகள் நடத்தப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு வாரங்களில் 17 ஆட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும், இவை எட்டு மைதானங்களில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு வாரத்தில் எல்லா அணிகளும் நான்கு போட்டிகளில் ஆடியிருக்கும். டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மட்டும் 5 போட்டிகளில் ஆடியிருக்கும். 

எல்லா அணிகளும் தனது சொந்த மைதானத்தில் 2 போட்டிகளிலும், மற்ற மைதானங்களில் 2 போட்டிகளிலும் ஆடவுள்ளது. டெல்லி 3 போட்டிகளில் சொந்த மைதானத்திலும், பெங்களூரு 3 போட்டிகளை வெளி மைதானத்திலும் ஆடவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
  • இந்த இரண்டு வாரங்களில் 17 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது
  • சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதுகின்றன
தொடர்புடைய கட்டுரைகள்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
'' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து!!
Advertisement