தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

Updated: 12 September 2019 18:37 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியை பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

Indian Test Squad For South Africa Series Announced, Shubman Gill Replaces KL Rahul
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை விராட் கோலி வழிநடந்த்தவுள்ளார். © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியை பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், தொடக்க வீரராக கே எல் ராகுல் தன்னை நிரூபிக்க தவறியதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியில் இணைக்கப்படவில்லை. இந்த அணியில் சுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அணியை அறிவித்த பின்னர், தேர்வுக் குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத், ரோஹித் ஷர்மாவுக்கு டாப் ஆர்டர் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அணியில் இடம்பெற்ற உமேஷ் யாதவ், தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறவில்லை.

செப்டம்பர் 26 முதல் விஜயநகரத்தில் நடைபெறும் மூன்று நாள் சுற்றுப்பயண போட்டியில் தென்னாப்பிரிக்கர்களை எதிர்கொள்ளும் வாரியத் தலைவர் XI அணிக்கு ரோஹித் கேப்டனாக இருப்பார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்தியா ஏ அணிக்காக அதிக ரன்கள் குவித்தது, தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டதும் 20 வயதான கில் தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. தொடரில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மேற்கிந்திய தீவுகளின் சீனியர் அணியில் அவர் சேர்க்கப்படாதது, அதிகமாக விமர்சிக்கப்பட்டது.

டெஸ்ட் தொடருக்கான அணி: விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா, செதேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, சுப்மன் கில்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
விடுமுறை நாளை புட்டாருருவில் கொண்டாடிய இந்திய அணி!
விடுமுறை நாளை புட்டாருருவில் கொண்டாடிய இந்திய அணி!
Advertisement