‘சச்சின் எனக்காக செய்த அந்த செயல்..!’- ஸ்ரீசாந்த் உருக்கம்

Updated: 16 October 2018 12:27 IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் குறித்த ஒர் உருக்கமான தகவலை பகிர்ந்துள்ளார்

On Bigg Boss, Sreesanth Recalls How Sachin Tendulkar Came To His Rescue
தற்போது பிக் பாஸ் ரியாலிட்டி டிவி ஷோ-வில் கலந்து கொண்டுள்ளார் ஸ்ரீசாந்த் © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் குறித்த ஒர் உருக்கமான தகவலை பகிர்ந்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி, 2007-ல் இருபது ஓவர் உலக கோப்பையை வென்ற போதும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை வென்ற போதும், அந்த அணியில் அங்கம் வகித்தவர் ஸ்ரீசாந்த். 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, டெல்லி போலீஸ் கைது செய்தது. பிசிசிஐ நிர்வாகமும், ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதனால், பல நெருக்கடிகளுக்கு உள்ளான ஸ்ரீசாந்த், தற்போது பிக் பாஸ் ரியாலிட்டி டிவி ஷோ-வில் கலந்து கொண்டுள்ளார். 

அந்த நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த், தன் சக போட்டியாளர் ஒருவருடன் சச்சின் குறித்து, ‘சச்சினை என்னால் மறக்கவே முடியாது. 2011 உலக கோப்பையை வென்று ஓரிரு ஆண்டுகள் கழித்து அணியின் அத்தனை வீரர்களையும் ஒன்றாக நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அணியில் அங்கம் வகித்த அனைத்து வீரர்களின் பெயரையும் சொல்லி, சிறப்பாக விளையாடினார்கள் என்று பேசினார். என் பெயர் விடுபட்டது. உடனே சச்சின், ‘உலக கோப்பையை வென்றதில் ஸ்ரீசாந்துக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது’ என்றார். அன்று இரவு முழுவதும் நான் அழுதுக் கொண்டே இருந்தேன்’ என்று உருக்கமாக தெரிவித்தார். இது பிக் பாஸ் வீட்டில் மட்டும் அல்லாமல், அதைப் பார்த்தவர்களையும் நெகிழச் செய்தது.

2015 ஆம் ஆண்டு, ஸ்ரீசாந்த் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால், அவர் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அப்படி இருந்தும் பிசிசிஐ, ஸ்ரீசாந்த் மீது விதித்த வாழ்நாள் தடையை நீக்கவில்லை.

Comments
ஹைலைட்ஸ்
  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் சச்சின் குறித்து பேசியுள்ளார் ஸ்ரீசாந்த்
  • எப்போதும் சச்சினை மறக்க மாட்டேன், ஸ்ரீசாந்த்
  • ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
''பயஸ் ஆடும்போது என்னாலும் முடியும், அணிக்கு திரும்புவேன்'' ஸ்ரீஷாந்த் நம்பிக்கை
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
'அவர் குற்றம் செய்யவில்லை'' ஸ்ரீஷாந்தின் மனைவி பிசிசிஐக்கு உருக்கமான கடிதம்!
‘சச்சின் எனக்காக செய்த அந்த செயல்..!’- ஸ்ரீசாந்த் உருக்கம்
‘சச்சின் எனக்காக செய்த அந்த செயல்..!’- ஸ்ரீசாந்த் உருக்கம்
Advertisement