இந்திய அணியின் புது பயிற்சியாளர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்...!

Updated: 16 August 2019 13:34 IST

இந்தியா அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி என விராத் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Indian cricket team head coach to be announced today
இந்தியா அணி பயிர்சியாளரை சிஏசி குழு தேர்வு செய்யும்

இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்த காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிந்தது. அதன் பின் அவருக்கு 45 நாட்கள் நீடிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியா அணியின் புது தலைமை பயிற்சியாளரை இன்று மாலை அறிவிக்கவுள்ளது சிஏசி. கபில்தேவ், அன்சுமான் கெக்வாத், சாந்தா ரங்கசாமி உள்ளடக்கிய சிஏசி கமிட்டியானது தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ளது.

IANS யின் செய்தியில் இந்த புது பயிற்சியாளரின் பதவிகாலமானது 2021 உலக டி20 தொடர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மும்பை இண்டியன்ஸ் பயிற்சியாளரான ராபின் சிங்கை முதலில் நேர்காணல் செய்தது இந்த சிஏசி குழு.

‘புது பயிற்சியாளர் 2021 வரை ஒப்பந்தம் செய்யப்படுவார். அதன் பின் அவரது ஒப்பந்தம் நீடிக்கவோ அல்லது புது பயிற்சியாளர் நியமிக்கவோ படுவார். உதவியாளர்களுக்கும் இதே நிலை பின்பற்றப்படும்' என தெரிவிக்கப்பட்டது.

ரவி சாஸ்திரி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், மைக் ஹீசன், டாம் மூடி, பில் சிம்மன்ஸ் ஆகியோர் இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்காக நேர்காணல் செய்யப்படுகின்றனர்.

ராபின் சிங்கை தொடர்ந்து ராஜ்புத் சேர்காணல் செய்யப்பட்டார். 2007 யில் டி20 கோப்பையை இந்தியா அணி வென்ற போது இந்தியா அணியின் மேனேஜராக இருந்தார் ராஜ்புத்.

இந்தியா அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி என விராத் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
Advertisement