தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட தர்மசாலா சென்றது இந்திய அணி!

Updated: 14 September 2019 16:24 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளை அக்டோபர் மாதம் ஆடவுள்ளது இந்தியா .

Indian Cricket Team Arrives In Dharamsala Ahead Of 1st T20I Against South Africa. See Pics
டி20 தொடரின் முதல் போட்டியை ஆட இந்திய கிரிக்கெட் அணி தர்மசாலாவுக்கு சென்றுள்ளது. © Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை ஆட இந்திய கிரிக்கெட் அணி தர்மசாலாவுக்கு சென்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. தென்னாப்பிரிக்க அணி கடந்த திங்கட்கிழமை இந்தியா வந்தடைந்தது. மற்ற இரண்டு போட்டிகள் மொகாலி(செப்டம்பர்) மற்றும் பெங்களூருவில் (செப்டம்பர் 22) நடக்கவுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் தோனி இடம்பெறவில்லை, இப்போது தென்னாப்பிரிக்க அணியில் இணைக்கப்படவில்லை.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டிகளை வென்ற அணியில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே இணைக்கப்பட்டுள்ளார்.

தோனி அணியில் இல்லாததால், ரிஷப் பன்ட் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக உள்ளார்.

சமீபத்தில், தோனி மோசமான பேட்டிங்கிற்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

டி20 போட்டிகளுக்கு பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளை அக்டோபர் மாதம் ஆடவுள்ளது இந்தியா.

"இந்தியாவில் மீண்டும் வந்து கிரிக்கெட் ஆடுவதில் மகிழ்ச்சியடைறேன்," என்று தென்னாப்பிரிக்கா அணியின் கசிகோ ரபாடா ட்விட்டரில் எழுதினார்.பாப் டு பிளெசிஸ் பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குயின்டன் டி கோக், டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க கேப்டனாக  நியமிக்கப்பட்டார்.

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி.

தென்னாப்பிரிக்க அணி: குயின்டன் டி கோக் (இ), ரஸ்ஸி வான் டெர் டுசென் (கி.மு), டெம்பா பவுமா, ஜூனியர் தலா, ஜார்ன் ஃபோர்டுயின், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்ஸி, ஜார்ஜ் லிண்டே.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: தொடக்க வீரராக சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: தொடக்க வீரராக சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!
Netflix ஆவணப்படத்தை புகழ்ந்த அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி!
Netflix ஆவணப்படத்தை புகழ்ந்த அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி!
"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது" - ஃபாப் டு பிளெசிஸ்!
"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது" - ஃபாப் டு பிளெசிஸ்!
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
"தொடக்க வீரர் வாய்ப்பு கொடுத்த கோலி, ரவி சாஸ்திரிக்கு நன்றி" - ரோஹிர் ஷர்மா
தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?
தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?
Advertisement