சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!

Updated: 10 October 2019 10:40 IST

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கிலும், இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் மிதாலியின் சிறப்பு நாள் இன்னும் மறக்கமுடியாததாக மாறியது.

Mithali Raj Becomes First Woman Cricketer To Complete 20 Years In International Cricket
மிதாலி தனது இருபது வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 204 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். © AFP

மிதாலி ராஜ் புதன்கிழமை சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். வடோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது களத்தில் இறங்கிய மிதாலி ராஜ் மைல்கல்லை எட்டினார். ஒருநாள் அணியின் தற்போதைய கேப்டனான மிதாலி, கடந்த நூற்றாண்டில் அயர்லாந்துக்கு எதிராக 26 ஜூன் 1999 அன்று சர்வதேச அளவில் அறிமுகமானார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கிலும், இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் மிதாலியின் சிறப்பு நாள் இன்னும் மறக்கமுடியாததாக மாறியது. எட்டு ஓவர்களுக்கு மேல் மீதமிருந்த நிலையில் 165 ரன்கள் எடுத்த இலக்கை இந்தியா துரத்தியது. இந்திய கேப்டன் 11 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

மிதாலி தனது இருபது வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 204 ஒருநாள், 10 டெஸ்ட் மற்றும் 89 டி20 விளையாடியுள்ளார். அதிக எண்ணிக்கையிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். பட்டியலில் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் (191), ஜூலன் கோஸ்வாமி (178), ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பிளாக்வெல் (144) உள்ளனர்.

இந்த விளையாட்டை விளையாடிய மிக வெற்றிகரமான பெண்கள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மிதாலி, 2021 ஒருநாள் உலகக் கோப்பையில் தனது ஆற்றலை மையமாகக் கொண்டு கடந்த மாதம் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

36 வயதான மிதாலி ராஜ், 2012, 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெண்கள் WT20 இன் மூன்று பதிப்புகள் உட்பட 32 டி20 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். 

 "2006ம் ஆண்டு முதல் டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பின்னர், 2021 ஒருநாள் உலகக் கோப்பைக்கு என்னைத் தயார்படுத்துவதில் எனது ஆற்றலை மையப்படுத்த டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியாவுக்காக உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவாக உள்ளது. அதில் என்னுடைய முழு ஆற்றலையும் செலுத்த வேண்டும், " என்று மிதாலி ராஜ் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்திய பேட்டிங் சிறந்த சச்சின் டெண்டுல்கர் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மிக நீண்ட காலத்திற்கு சர்வதேச கிரிக்கெட் விளையாடிய ஒட்டுமொத்த உலக சாதனையைப் படைத்துள்ளார்.

டெண்டுல்கரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 22 ஆண்டுகள் மற்றும் 91 நாட்கள் நீடித்தது. அவருக்கு பிறகு முன்னாள் இலங்கை தொடக்க வீரர் சனத் ஜெயசூரியாவும், அவரது வாழ்க்கை 21 ஆண்டுகள் 184 நாட்கள் நீடித்தது. பாகிஸ்தானின் ஜாவேத் மியாந்தாத் 20 ஆண்டுகள் 272 நாட்கள் விளையாடினார்.

இந்த ஆண் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். ஆனால் மிதாலி இன்னும் வலுவாக இருக்கிறார். அதாவது பட்டியலில் ஓய்வுபெறும் நேரத்தில் இந்த வீரர்களில் ஒருவரையாவது மிஞ்சுவதற்கு அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
வெளியானது ஷபாஷ் மிது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... நன்றி தெரிவித்த மிதாலி ராஜ்!
வெளியானது 'ஷபாஷ் மிது' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... நன்றி தெரிவித்த மிதாலி ராஜ்!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி
Advertisement