பெண்கள் டி20 கிரிக்கெட்: தொடர்ந்து இரண்டாவது போட்டி தடைப்பட்டது!

Updated: 30 September 2019 15:00 IST

India women vs South Africa Women: இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான பெண்கள் டி20 அணியின் மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

India Women vs South Africa Women: India vs South Africa Third T20I Washed Out
India women vs South Africa Women: இந்தத் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. © Twitter

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான பெண்கள் டி20 அணியின் மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 போட்டியில், தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டி கைவிடப்பட்டுள்ளது. அங்கு காலையில் மழை பெய்தது, இதன் காரணமாக இரவு 7 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த போட்டியின் நேரத்தில் களத்தை உலர வைக்க முடியவில்லை.

இந்தத் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் போட்டியில், 131 என்ற இலக்கை இந்தியா வெற்றிகரமாக பாதுகாத்தது. ஆஃப்-ஸ்பின்னர் தீப்தி ஷர்மாவின் அற்புதமான பந்து வீசினார். அவர் தொடர்ந்து மூன்று மெய்டன்களை வீசினார். அந்த நேரத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், தென்னாப்பிரிக்காவை 119 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்தியாவுக்கு உதவியது.

டி20 தொடருக்கு பிறகு இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
West Indies Women vs India Women: 3வது டி20 போட்டியில் வென்று இந்தியா முன்னிலை
West Indies Women vs India Women: 3வது டி20 போட்டியில் வென்று இந்தியா முன்னிலை
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
முதல் ஒருநாள் போட்டி: அறிமுக போட்டியில் நட்சத்திர வீரரானார் பிரியா புனியா!
முதல் ஒருநாள் போட்டி: அறிமுக போட்டியில் நட்சத்திர வீரரானார் பிரியா புனியா!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
Advertisement