பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

Updated: 27 February 2019 18:11 IST

2-0 என்ற கணக்கில் தொடரின் முன்னிலையில் உள்ளது இந்திய அணி.

India Women Look To Continue Winning Momentum Against England
ஜுலான் கோஸ்வாமி மற்றும் ஷிகா பாண்டே முதல் இரண்டு போட்டிகளில் தனித்தனியே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். © Twitter

இங்கிலாந்துடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய பெண்கள் அணி ஆடி வருகிறது. இதில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல் போட்டியை 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இந்நிலையில் தொடரை வென்று வொயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி நாளை மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது. 

2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணியில், துவக்க வீரர் ஸ்மிருதி மந்தனா இரண்டாவது போட்டியில் அபாரமாக ஆடி 63 ரன்களை குவித்தார்.. இதன் மூலம் ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற இரண்டு புள்ளிகளை பெற்றது இந்திய அணி. 

புதிய பயிற்சியாளர் டபள்யூவி ராமன் தலைமையில் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. கேப்டன் மிதாலி ராஜ் முதல் இரண்டு போட்டிகளில் முறையே 44 மற்றும் 47 ரன்களை குவித்துள்ளார். மந்தனா - மிதாலி தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

பூனம் ராட் ஒருநாள் அணிக்கு திரும்பி தனது ஃபார்மை நிரூபித்துள்ளது. மிடில் ஆர்டருக்கு வலு சேர்க்கிறது. மெமினாவின் அதிரடி துவக்க வீரராக சிறப்பாக உள்ளது. 

ஜுலான் கோஸ்வாமி மற்றும் ஷிகா பாண்டே முதல் இரண்டு போட்டிகளில் தனித்தனியே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இங்கிலாந்தால் இந்தியாவின் தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் மற்றும் எக்த அபிஷட்டின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். 

இப்போது உள்ள ஃபார்மில் இந்திய அணி மூன்றாவது போட்டியையும் வென்று வொயிட்வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய பெண்கள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஜூலான் கோஸ்வாமி, ஸ்மிருதி மந்தனா, ஜெமினா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, தனியா பாட்டியா (கீப்பர்), கல்பனா (கீப்பர்), மோனா மெஷ்ரம், ஏக்டா பிஷத், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், ஷிகா பாண்டே, மன்ஸி ஜோஷி, பூனம் ராட், ஹர்லீன் டியோல். 

Comments
ஹைலைட்ஸ்
  • இரண்டாவது ஒருநாள் போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா
  • ஸ்மிருதி மந்தனா, இரண்டாவது போட்டியில் 63 ரன்களை குவித்தார்
  • 3 ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது இந்தியா
தொடர்புடைய கட்டுரைகள்
West Indies Women vs India Women: 3வது டி20 போட்டியில் வென்று இந்தியா முன்னிலை
West Indies Women vs India Women: 3வது டி20 போட்டியில் வென்று இந்தியா முன்னிலை
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
விராட் கோலியை மிஞ்சி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
"எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும்" - விமர்சித்தவருக்கு பதிலளித்த மிதாலி ராஜ்!
முதல் ஒருநாள் போட்டி: அறிமுக போட்டியில் நட்சத்திர வீரரானார் பிரியா புனியா!
முதல் ஒருநாள் போட்டி: அறிமுக போட்டியில் நட்சத்திர வீரரானார் பிரியா புனியா!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கடந்த முதல் பெண் வீரரானார் மிதாலி ராஜ்!
Advertisement