உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா ஆடவிருக்கும் முதல் போட்டி! #IndiaVsWI

Updated: 03 August 2019 11:27 IST

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி இப்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு மாத காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

India Return To Action After World Cup 2019 With T20 Series Against West Indies
உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறந்த ஃபார்மில் இருந்தனர். © AFP

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி இப்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு மாத காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த போட்டிகளுக்கு அணி தேர்வில் பிரச்னை ஏற்பட்டது. விராட் கோலிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் பிரச்னை என்ற தகவல்கள் வெளியாகின. இத்தனைக்கும் பிறகு முதலில் தொடங்கவுள்ள டி20 போட்டியில் ஆடுவதற்கு இந்திய அணி அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. இந்திய அணிக்குள் மட்டும் இப்போது பிரச்னையில்லை, மேற்கிந்திய தீவுகள் அணி மிகவும் வலிமை வாய்ந்த அணியாக இருப்பதும் இந்திய அணிக்கு பிரச்னையாக இருக்க வாய்ப்புள்ளது. விராட் கோலியின் கேப்டன்ஸியை கேலி செய்துவரும் நிலையில், இது அவருக்கு சவாலான ஒன்றாகவே அமையும். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்யப்படாத பல வீரர்கள் உள்ளனர். இதனால், தேர்வுக்குழுவினரிடம் கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்த கட்டத்தில் கோலி தன் கேப்டன்ஸியை நிரூபிக்க வேண்டியுள்ளது.

குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் கோலிக்கு ஓய்வளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முக்கிய வீரர்கள் அனைவரையும் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் மட்டும் இடம்பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்து சுற்றுப்பயணம் முழுவதும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பையில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே இருவருக்கும் முதல் இரண்டு வாரங்கள் சற்று கடினமாகவே இருக்கும். கடைசியாக பாண்டே இந்தியாவுக்காக நவம்பர் 2018ம் ஆண்டும், ஐயர் பிப்ரவரி 2018ம் ஆண்டும் ஆடினர்.

ரோஹித் ஷர்மா மற்றும் காயத்திலிருந்து மீண்ட ஷிகர் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். நான்காவது இடத்தில் கே எல் ராகுல் இறங்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த மைதானத்தில் தான் மூன்று வருடங்களுக்கு முன்பாக 110 ரன்கள் குவித்தார் ராகுல்.

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ரோஹித் ஷர்மா, ஒரே உலகக் கோப்பையில் ஐந்து சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தத் தொடரிலும் அதே ஃபார்முடன் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலியுடன் பிரச்னை என்ற வதந்திகள் வந்த போதிலும் துணை கேப்டன் என்ற இடத்துக்கு எந்த பாதிப்பும் வரவில்லை.

இந்த சுற்றுப்பயணம் முதல் ரிஷப் பன்ட்டுக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்கள் தோனி ராணுவத்தில் பயிற்சி பெற வேண்டி விலகியுள்ளார். அதனால், விக்கெட் கீப்பராக பன்ட் செயல்படுவார்.

குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் மேற்கிந்தய தீவுகள் அணி மிகவும் வலிமை வாய்ந்த அணியாக உள்ளது. போலார்ட் மற்றும் சுனில் நரேன் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர், கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டியில் ஆடவுள்ளார்.

காயத்தில் இருந்து மீண்டு ரஸல் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக ஜேசன் முகமது இடம்பெற்றுள்ளார்.

டி20 அணி:

மேற்கிந்திய தீவுகள்: கார்லஸ் பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்பெல், ஈவின் லிவிஸ், சிம்ரன் ஹெட்மெயர், நிக்கோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், ரோவ்மேன் போவெல், கீமோ பால், சுனில் நரேன், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ், அந்தோனி ப்ராம்பெல், ஜேசன் முகமது, கியாரி பிரா

3 டி20 போட்டிக்காக இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), க்ருணால் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தன் திறமையை வெளிகாட்ட ரிஷப் பன்ட்டுக்கு இதுவே சிறந்த வாய்ப்பு" - விராட் கோலி!
"தன் திறமையை வெளிகாட்ட ரிஷப் பன்ட்டுக்கு இதுவே சிறந்த வாய்ப்பு" - விராட் கோலி!
ரோஹித் Vs கோலி: டி20 போட்டியில் அரைசத சாதனையை முந்தப்போவது யார்?
ரோஹித் Vs கோலி: டி20 போட்டியில் அரைசத சாதனையை முந்தப்போவது யார்?
டி20 பயிற்சியில்  ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விராட் கோலி!
டி20 பயிற்சியில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20: எங்கு, எப்போது காணலாம்!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20: எங்கு, எப்போது காணலாம்!
உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா ஆடவிருக்கும் முதல் போட்டி! #IndiaVsWI
உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா ஆடவிருக்கும் முதல் போட்டி! #IndiaVsWI
Advertisement