கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?

Updated: 02 August 2019 17:41 IST

2019 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்தார். இதில் அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். இதனால், ஒரே உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த குமார் சங்ககராவின் (2015) சாதனையை முறியடித்தார்.

Rohit Sharma Four Hits Away From Beating Awesome Chris Gayle Record
2019 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்தார். © AFP

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் முன்னிலையில் இருக்கிறார். ரோஹித் ஷர்மா, இன்னும் 4 சிக்ஸர் அடித்தார் கெயிலின் சாதனையை முறியடித்து முன்னிலை பெறுவார். வரும் சனிக்கிழமை இந்த இரு அணிகளும் ஃப்லோரிடாவில் தங்களுடைய முதல் டி20 போட்டியை தொடங்கவுள்ளன. கிறிஸ் கெயில் இந்த டி20 அணியில் இடம்பெறவில்லை. அதனால், இந்த சாதனையை ரோஹித் ஷர்மா முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது. மேற்கிந்தய தீவுகளுக்கு எதிராக இந்தியா மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. தற்போது ரோஹித் ஷர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கெயிலும் (105), இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்திலும் (103) உள்ளனர்.

2019 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்தார். இதில் அவர் 5 சதங்கள் அடித்துள்ளார். இதனால், ஒரே உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த குமார் சங்ககராவின் (2015) சாதனையை முறியடித்தார். 

ஆனால், உலகக் கோப்பைக்கு பிறகு விராட் கோலியுடன் ரோஹித் ஷர்மாவுக்கு முரண் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு முன்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், ரோஹித்துக்கும் தனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என விராட் கோலி மறுத்தார்.

இரு வீரர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு உள்ளது என்று சொல்பவர்களுக்கு மேலும் அது குறித்து பேசும் விதமாக ரோஹித் ஷர்மா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

"நான்  என் அணிக்காக மட்டும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறேன்," என்று ரோஹித் ஷர்மா ட்விட் செய்துள்ளார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
"ரோஹித் ஷர்மா உலகத் தரம் வாய்ந்த வீரர்" - புகழும் ஆடம் கில்கிறிஸ்ட்!
"ரோஹித் ஷர்மா உலகத் தரம் வாய்ந்த வீரர்" - புகழும் ஆடம் கில்கிறிஸ்ட்!
கோலி - ரோஹித் சர்மா குறித்த வதந்திகள் "முழுமையான முட்டாள்தனம்"  - ரவி சாஸ்திரி!
கோலி - ரோஹித் சர்மா குறித்த வதந்திகள் "முழுமையான முட்டாள்தனம்" - ரவி சாஸ்திரி!
ராகுல் ஆட்டமிழக்கும் முறை வருத்தமளிக்கிறது - வாசிம் ஜாபர்
ராகுல் ஆட்டமிழக்கும் முறை வருத்தமளிக்கிறது - வாசிம் ஜாபர்
Advertisement