இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20: எங்கு, எப்போது காணலாம்!

Updated: 03 August 2019 10:25 IST

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி இப்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு மாத காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

India vs West Indies, 1st T20I: When And Where To Watch Live Telecast, Live Streaming
விராட் கோலிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் பிரச்னை என்ற தகவல்கள் வெளியாகின. © AFP

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி இப்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு மாத காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த போட்டிகளுக்கு அணி தேர்வில் பிரச்னை ஏற்பட்டது. விராட் கோலிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் பிரச்னை என்ற தகவல்கள் வெளியாகின. இத்தனைக்கும் பிறகு முதலில் தொடங்கவுள்ள டி20 போட்டியில் ஆடுவதற்கு இந்திய அணி அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. இந்திய அணிக்குள் மட்டும் இப்போது பிரச்னையில்லை, மேற்கிந்திய தீவுகள் அணி மிகவும் வலிமை வாய்ந்த அணியாக இருப்பதும் இந்திய அணிக்கு பிரச்னையாக இருக்க வாய்ப்புள்ளது. விராட் கோலியின் கேப்டன்ஸியை கேலி செய்துவரும் நிலையில், இது அவருக்கு சவாலான ஒன்றாகவே அமையும். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்யப்படாத பல வீரர்கள் உள்ளனர். இதனால், தேர்வுக்குழுவினரிடம் கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்த கட்டத்தில் கோலி தன் கேப்டன்ஸியை நிரூபிக்க வேண்டியுள்ளது.

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டி எப்போது?

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3,2019 (சனிக்கிழமை).

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டி எங்கே நடக்கிறது?

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டி சென்ட்ரல் ப்ரோவாட் பார்க் மைதானம், லாடர்ஹில், ஃப்லோரிடாவில் நடக்கிறது.

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும்.

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டி எந்த டி.வி சேனலில் ஒளிப்பரப்பாகும்?

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டி சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகும்.

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டியின் லைவ் எங்கு காணலாம்?

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20 போட்டியை SonyLIV-இல் காணலாம். மேலும்,  sports.ndtv.com-லும் பார்க்கலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தன் திறமையை வெளிகாட்ட ரிஷப் பன்ட்டுக்கு இதுவே சிறந்த வாய்ப்பு" - விராட் கோலி!
"தன் திறமையை வெளிகாட்ட ரிஷப் பன்ட்டுக்கு இதுவே சிறந்த வாய்ப்பு" - விராட் கோலி!
ரோஹித் Vs கோலி: டி20 போட்டியில் அரைசத சாதனையை முந்தப்போவது யார்?
ரோஹித் Vs கோலி: டி20 போட்டியில் அரைசத சாதனையை முந்தப்போவது யார்?
டி20 பயிற்சியில்  ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விராட் கோலி!
டி20 பயிற்சியில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20: எங்கு, எப்போது காணலாம்!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் முதல் டி20: எங்கு, எப்போது காணலாம்!
உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா ஆடவிருக்கும் முதல் போட்டி! #IndiaVsWI
உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா ஆடவிருக்கும் முதல் போட்டி! #IndiaVsWI
Advertisement