இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் போட்டி எங்கு, எப்போழுது காணலாம்?

Updated: 07 August 2019 18:40 IST

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

India vs West Indies, 1st ODI: When And Where To Watch Live Telecast, Live Streaming
உலகக் கோப்பைக்கு பிறகு இந்தியா ஆடவிருக்கும் முதல் ஒருநாள் போட்டி வரும் வியாழனன்று நடக்கிறது. © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. உலகக் கோப்பைக்கு பிறகு இந்தியா ஆடவிருக்கும் முதல் ஒருநாள் போட்டி வரும் வியாழனன்று நடக்கிறது. குயானாவில் உள்ள மைதானத்தில் இந்த மூன்று நாள் ஒருநாள தொடர் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி, இந்த தொடரில் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்து அணியை வெற்றி அடைய செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்து சிறந்த வீரரான ஷிகர் தவான் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். 130 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஷிகர் தவான் 7 சதம் அடித்துள்ளார். ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. கேஎல் ராகுல் நான்காவது இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி எப்போழுது?

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 8,2019 (வியாழக்கிழமை).

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி எங்கு நடக்கிறது?

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி புரோவிடென்ஸ் மைதானம், குயானாவில் நடக்கிறது.

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி எந்த சேனலில் ஒளிபரப்பாகும்?

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும்.

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டி எங்கு காணலாம்?

இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டியை SonyLIV- இல் நேரடி ஒளிபரப்பை காணலாம். மேலும், sports.ndtv.com தளத்திலும் காணலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் போட்டி எங்கு, எப்போழுது காணலாம்?
இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் போட்டி எங்கு, எப்போழுது காணலாம்?
முதல் ஒருநாள் போட்டி: உலகக் கோப்பையில் செய்த தவறை திருத்திகொள்ளுமா இந்தியா? #Preview
முதல் ஒருநாள் போட்டி: உலகக் கோப்பையில் செய்த தவறை திருத்திகொள்ளுமா இந்தியா? #Preview
Advertisement