Listen to the latest songs, only on JioSaavn.com
 

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி: எங்கு, எப்போது காணலாம்?

Updated: 01 October 2019 18:35 IST

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடக்கிறது

1st Test: When And Where To Watch Live Telecast, Live Streaming
சஹா கடைசியாக 2018 ஜனவரியில் இந்தியாவுக்காக விளையாடினார். © AFP

விசாகபட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டியில் 34 வயதான விக்கெட் கீப்பரான விருத்திமான் சஹா, இளம் ரிஷப் பன்ட்டுக்கு பதிலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கேப்டன் விராட் கோலி செவ்வாயன்று போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். சஹா கடைசியாக 2018 ஜனவரியில் இந்தியாவுக்காக விளையாடினார். தோள்பட்டை காயம் காரணமாக விலகிய அவருக்கு பதிலாக நீண்ட வடிவத்தில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தொடர்ந்தார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் குவித்த ரிஷப் பன்ட் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிரூபிக்க தவறிவிட்டார். சஹாவைத் தவிர, அனைத்து கண்களும் வரையறுக்கப்பட்ட ஓவரில் துணை கேப்டன் ரோஹித் சர்மா மீது இருக்கும், அவர் மிக நீண்ட வடிவத்தில் தனது இடத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.ஷிகர் தவான் மற்றும் கே எல் ராகுல் இருவரும் இல்லாத காரணத்தினால், ரோஹித் ஷர்மா சுப்மன் கில்லுக்கு பதிலாக தொடக்க ஆட்டம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மயங்க் அகர்வால், இரண்டு பேட்ஸ்மேன்களில் ஒருவரோடு இன்னிங்ஸைத் தொடங்குவார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி எப்போது?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2 முதல் 6 வரை,2019 (புதன்கிழமை-ஞாயிற்றுகிழமை).

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி எங்கே நடக்கிறது?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடக்கிறது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி எந்த டி.வி சேனலில் ஒளிப்பரப்பாகும்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகும்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியின் லைவ் எங்கு காணலாம்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியை SonyLIV-இல் காணலாம். மேலும்,  sports.ndtv.com-லும் பார்க்கலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"என் ஆலோசனைகளை ஷமி கேட்கிறார், பாகிஸ்தான் வீரர்கள் கேட்பதில்லை" - சோயிப் அக்தர்
"என் ஆலோசனைகளை ஷமி கேட்கிறார், பாகிஸ்தான் வீரர்கள் கேட்பதில்லை" - சோயிப் அக்தர்
எய்டன் மார்க்ரமை அவுட்டாக்க ஜடேஜா பிடித்த ஒற்றை கை கேட்ச்!
எய்டன் மார்க்ரமை அவுட்டாக்க ஜடேஜா பிடித்த ஒற்றை கை கேட்ச்!
முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்!
முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்!
முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
Advertisement