நான்காவது ஒருநாள் போட்டி : நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! #Highlights

Updated: 31 January 2019 11:45 IST

Live Cricket Score: நியூசிலாந்து அணி 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடுகிறது.

Live Cricket Score, IND vs NZ 4th ODI, India vs New Zealand Live Match Updates: Kane Williamson Opts To Bowl Against India In Hamilton
© AFP

இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளை வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது. உலகக் கோப்பை மற்றும் வேலைப்பளுவை மனதில் கொண்டு கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோலிக்கு பதிலாக கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த போட்டி ரோஹித் ஷர்மாவின் 200வது ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான்காவது போட்டியில் டாஸில் நியூசிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் கோலிக்கு பதிலாக சுப்மன் கில்லும், ஷமிக்கு பதிலாக கலீல் அகமதும் சேர்க்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில்லுக்கு இது அறிமுகப்போட்டி. தோனியிடம் இந்திய அணியின் தொப்பியை பெற்று அறிமுகமானார். நியூசிலாந்து தரப்பில் பெர்குசன்,சவுத்தி, முன்ரோ அணியில் இடம்பெறவில்லை.

அணி விவரம்:

இந்தியா:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மன் கில், ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், குல்தீப், சாஹல், கலீல் அகமது.

நியூசிலாந்து:

கப்தில், நிக்கோலஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், லாதம், நீஸம், சாண்ட்னர், க்ராண்ட்கோம், டோட் ஆஷ்லே, மாட் ஹென்றி, போல்ட்.

ஓவர் 5:

தவான் மற்றும் ரோஹித் துவக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக ஆடி வருகின்றனர். 5 ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் குவித்துள்ளது. தவான் 13 ரன்களுடனும், ரோஹித் 5 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

ஓவர் 6:

6 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் 6 ரன்களுடனும் ஆடி வருகிறர். துவக்க வீரர் ஷிகர் தவான் 20 பந்தில் 13 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அறிமுக வீரர் சுப்மன் கில் களமிறங்கியுள்ளார்.

ஓவர் 8:

8 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் 23 பந்தில் 7 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார், மற்றோரு துவக்க வீரர் ஷிகர் தவான் 20 பந்தில் 13 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

ஓவர் 10:

தவான் மற்றும் ரோஹித் துவக்க வீரர்கள் இருவரும் முறையே 13 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். 10 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் குவித்துள்ளது. அறிமுக வீரர் சுப்மன்கில் 9 ரன்களுடன் ஆடி வருகிறார். ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் க்ராண்ட்ஹோம் பந்தில் கப்திலிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ஓவர் 11:

தவான் மற்றும் ரோஹித் துவக்க வீரர்கள் இருவரும் முறையே 13 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். 11 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் குவித்துள்ளது. அறிமுக வீரர் சுப்மன்கில் 9 ரன்களுடன் ஆடி வருகிறார். ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் க்ராண்ட்ஹோம் பந்தில் கப்திலிடம் கேட்ச் கொடுத்தும், தினேஷ் கார்த்திக் க்ராண்ட்கோம் பந்தில் லாதமிடம் கேட்ச் கொடுத்தும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ஓவர் 12:

12 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் குவித்துள்ளது. அறிமுக வீரர் சுப்மன்கில் 9 ரன் எடுத்து போல்ட் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். போல்ட் 3 விக்கெட்டுகளையும், க்ராண்ட்ஹோம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

ஓவர் 13:

12.1 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் குவித்துள்ளது. கேதர் ஜாதவ் போல்ட் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். போல்ட் 4 விக்கெட்டுகளையும், க்ராண்ட்ஹோம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

ஓவர் 15:

15 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் குவித்துள்ளது. துவக்க வீரர்கள் மோசமாகவும், நடுவரிசை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தும் அதிர்ச்சியளித்தனர். ராயுடு, தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகினர்.

ஓவர் 17:

17 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் குவித்துள்ளது. புவனேஷ்வர் குமார் 1 ரன் எடுத்து க்ராண்ட்ஹோம் பந்தில் போல்டனார்.

ஓவர் 20:

20 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் குவித்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா போல்ட்டின் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி நம்பிக்கை அளித்த வேளையில் போல்ட் பந்திலேயே லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். போல்ட் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் போல்ட் இடைவெளியின்றி 10 ஓவர்கள் பந்துவீசி தனது ஸ்பெல்லை முடித்தார்.

ஓவர் 25:

25 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் எடுத்துள்ளது. குல்தீப் 12 ரன்களுடனும், சாஹல் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

ஓவர் 30:

30 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது. குல்தீப் 15 ரன் எடுத்து ஆஷ்லே பந்தில் ஆட்டமிழந்தார், சாஹல் - குல்தீப் ஜோடி இந்த போட்டியில் அதிகப்பட்ச பார்ட்னஷிப்பை பதிவு செய்தது. சாஹல் 17 ரன்களுடன் ஆடி வருகிறார். இன்றைய போட்டியில் சஹால் தான் இந்திய வீரர்களில் அதிக ரன்களை குவித்தவர்.

ஓவர் 31:

30.5 ஓவரில் இந்தியா 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாஹல் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்தது சாஹல்தான். இந்திய தரப்பில் சாஹல் 18, பாண்ட்யா 16, குல்தீப் 15, தவான் 13 தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 5 விக்கெட்டுகளையும், க்ராண்ட்கோம் 3 விக்கெட்டுகளையும், ஆஷ்லே, நஸீம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் 7வது குறைந்தபட்ச ஸ்கோராகும்.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து அணி 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடவுள்ளது.

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய நியூசிலாந்து முதல் ஓவரிலேயே கப்தில் விக்கெட்டை இழந்தது.

முதல் மூன்று பந்தில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை அடித்த கப்தில் புவனேஷ்வர் குமாரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார்.

ஓவர் 7:

6.2 ஓவர் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. நிக்கோலஸ் 13 ரன்களுடன் ஆடிவருகிறார். வில்லியம்சன் 11 ரன் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்னும் நியூசிலாந்து வெற்றி பெற 54 ரன்கள் மட்டுமே தேவை.

ஓவர் 13:

13 ஓவர் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. நிக்கோலஸ் 29 ரன்களுடனும் ராஸ் டெய்லர் 25 ரன்களுடனும் ஆடிவருகின்றனர். இன்னும் நியூசிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் மட்டுமே தேவை.

நியூசிலாந்து நான்காவது ஒருநாள் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தனர். 

30.5 ஓவரில் இந்தியா 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  சாஹல் 18  ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்தது சாஹல்தான்.  இந்திய தரப்பில் சாஹல் 18, பாண்ட்யா 16, குல்தீப் 15, தவான் 13 தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 5 விக்கெட்டுகளையும், க்ராண்ட்கோம் 3 விக்கெட்டுகளையும், ஆஷ்லே, நஸீம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் 7வது குறைந்தபட்ச ஸ்கோராகும்.

நியூசிலாந்து அணி 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கியது. 14.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. நியூசிலாந்து தரப்பில் நிக்கோலஸ் 30 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 37 ரன்களுடனும் களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டி வரும் பிப்ரவரி 3ம் தேதி வெலிங்டனில் நடக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"நாங்கள் சரியாக ஆடவில்லை" - 200வது போட்டியில் தோற்ற ரோஹித் ஷர்மா!
"நாங்கள் சரியாக ஆடவில்லை" - 200வது போட்டியில் தோற்ற ரோஹித் ஷர்மா!
நான்காவது ஒருநாள் போட்டி : நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! #Highlights
நான்காவது ஒருநாள் போட்டி : நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! #Highlights
Advertisement