இந்தியா-இங்கிலாந்து: வைரலான விராத் கோலியின் மைக்-டிராப் கொண்டாட்டம்

Updated: 02 August 2018 11:38 IST

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் விக்கெட்டை இந்திய வீரர்கள் கைப்பற்றிய போது, இந்திய அணி கேப்டன் விராத் கோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டர்

India vs England: Virat Kohli Mocks Joe Root With Mic-Drop Celebration After Run Out. Watch

இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று இங்கிலாந்து நாடு பர்மிங்கமில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய இங்கிலாந்தின் ஜோ ரூட்- பேர்ஸ்டாவ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் ஜோடி சேர்த்தது. நேற்றைய போட்டி மூலம் இங்கிலாந்து அணி தனது 1000வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் விக்கெட்டை இந்திய வீரர்கள் கைப்பற்றிய போது, இந்திய அணி கேப்டன் விராத் கோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டர். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஒரு நாள் தொடரின் போது ஜோ ரூட் கொண்டாட்டத்தின் அசைவுகளை, நேற்றைய போட்டியில் விராத் கோலி செய்து காட்டினார்.

முதல் நாள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புடன் 285 ரன்கள் இங்கிலாந்து அணி எடுத்து இருந்தது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி பந்து வீச்சாளர்கள், 9 விக்கெட்டுகளை எடுத்தனர். அஷ்வின் நான்கு விக்கெட்டுகளும், ஷமி இரண்டு விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நேற்றைய போட்டியில், விராத் கோலியின் கொண்டாட்டம் சமூக வலைத்தளத்தில் ஹைலட்டானது. டெஸ்ட் தொடரை கைப்பற்ற இரு அணிகள் தீவிர முனைப்பில் களம் இறங்கியுள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • இங்கிலாந்து அணி தனது 1000வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டுள்ளது
  • விராத் கோலியின் கொண்டாட்டம் சமூக வலைத்தளத்தில் ஹைலட்டானது
  • அஷ்வின் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்
தொடர்புடைய கட்டுரைகள்
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
இந்த முறை
இந்த முறை 'நோட்புக்' சைகை இல்லை... என்ன செய்தார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
Advertisement