இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 23வது சதம் அடித்து விராத் மிரட்டல்

Updated: 21 August 2018 10:37 IST

197 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து விராத் சிறப்பாக விளையாடினார்

India vs England: Virat Kohli Hits 23rd Test Ton As India Set Daunting Target For England
© ட்விட்டர்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கம்மில் நடைப்பெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மிரட்டலான ஆட்டத்தை வெளிப்பிடுத்திய இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்

இந்த போட்டியில் சதம் அடித்தது மூலம், டெஸ்ட் போட்டிகளில் தனது 23 வது சதத்தை விராத் பதிவு செய்தார். 197 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து விராத் சிறப்பாக விளையாடினார். மேலும், இந்திய அணியின் புஜாரா (72), ஹர்டிக் பாண்டியா (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 23 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் களத்தில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற, 498 ரன்கள் எடுக்க வேண்டும்.

Comments
ஹைலைட்ஸ்
  • 197 பந்துகளில் கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடித்தார்
  • 352 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆட்டத்தை டிக்ளேர் செய்தது
  • இங்கிலாந்து அணி பெற, 498 ரன்கள் எடுக்க வேண்டும்
தொடர்புடைய கட்டுரைகள்
அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிரக்யான் ஓஜா!
அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிரக்யான் ஓஜா!
NZ vs IND: மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகள்...புதிய வரலாறு படைத்த ரோஸ் டெய்லர்!
NZ vs IND: மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகள்...புதிய வரலாறு படைத்த ரோஸ் டெய்லர்!
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
IND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
IND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
1st Test, Preview: வலிமையான அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது இந்தியா!
1st Test, Preview: வலிமையான அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது இந்தியா!
Advertisement