இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: மழையால் முதல் நாள் ரத்து!

Updated: 10 August 2018 12:10 IST

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

India vs England: Rain Washes Out Day 1 Of 2nd Test At Lord

இங்கிலாந்து - இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள், மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற வேண்டிய இந்த டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில் தொடங்க இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும், கனமழை பெய்து வந்த காரணத்தால், முதல் நாள் போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, 2001 ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் நாள் போட்டி மழையால் ரத்து
  • 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது
  • 2வது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு இவர்கள் தான் கேப்டன்!
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு இவர்கள் தான் கேப்டன்!
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
‘சபாஷ், சரியான போட்டி…’- கோலிக்கு செக் வைக்கும் ஸ்மித்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
Advertisement