"விராத் கோலியை கண்டு பயமில்லை" இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் பேட்டி

Updated: 07 August 2018 18:41 IST

இந்தியா- இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய விராத் கோலி முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார்

India vs England: "Not Scared Of Virat Kohli", Says England

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகிறது. பர்மிங்கம்மில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியுற்றது.

இதன் மூலம் 1-0 என்ற கணக்கில், டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பேட்ஸ்மான்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். எனினும், கேப்டன் விராத் கோலியின் அதிரடி ஆட்டத்தால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராய், “விராத் கோலியை கண்டு நாங்கள் அஞ்சவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சார்டுசன், இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராய், இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் ஸ்ப்ரிட் ஆப் கிரிக்கெட் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜேசன் ராய், போட்டி களத்தில் விராத் கோஹ்லியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய விராத் கோலி முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார். அதுமட்டுமின்றி, முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களும் சேர்த்து 200 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் இன்னிங்ஸில், கேப்டன் விராத் கோலி சதம் அடித்தார்
  • சிறப்பாக விளையாடிய கோலி, முதல் டெஸ்ட்டில் மொத்தம் 200 ரன்கள் எடுத்தார்
  • விராத் கோலியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது என்ற ஜேசன் ராய் தெரிவித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
Advertisement