தோனியின் சாதனை பட்டியலில் மேலும் ஓர் மணிமகுடம்

Updated: 12 July 2018 14:55 IST

ஒருநாள் போட்டிகள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் அதிகபட்சமாக  785 முறை விக்கெட்களை கீப்பராக இருந்து வீழ்த்தியுள்ளார்

India vs England: MS Dhoni Set To Join Sachin Tendulkar, Sourav Ganguly, Rahul Dravid In This Elite Club
© Facebook

 மகேந்திர சிங் தோனிக்கு சாதனைகள் என்பது சாதாரண விஷயம். பல ரெக்கார்டுகளை உடைத்த தோனி, இப்போது தனது லிஸ்டில் புதிய சாதனை ஒன்றை செய்ய இருக்கிறார். இன்று இங்கிலாந்து அணியோடு நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டியில் 33 ரன்களைக் கடந்தால் தோனி 10,000 ரன்களை தொடுவார். 

உலக் அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எடுக்கப்போகும் பன்னிரண்டாவது கிரிக்கெட் வீரர் தோனி ஆவார். இச்சாதனையை செய்வதால், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகிய ஜாம்பவான்களுடன் மகேந்திர சிங் தோனி எலைட் கிளப்பில் இணைவார். மேலும், இந்த பட்டியலில் இணையும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையும் தோனிக்கு சேரும்.

சச்சின் டெண்டுல்கர் (18,426) ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் அவரை அடுத்து , இலங்கையின் குமார் சங்கக்காரா (14,716), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (13 704), இலங்கையின் ஜெயசூர்யா (13430), மஹேலா ஜெயவர்தனே (12,650) 

பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் (11739), தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் (11,579) கங்குலி (11,363), ராகுல் டிராவிட் (10,889), வெஸ்ட் இண்டீசின் பிரயன் லாரா (10,405) மற்றும் திலக ரத்னே தில்ஷன் (10,290)  ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

10 ஆயிரம் ரன்களை கடக்க இரண்டாவது விக்கெட் கீப்பர் தோனி ஆவார். இலங்கையின் குமார் சங்கக்காராவுக்கே முதலிடம். 
 
இது மட்டும் அல்ல,  தோனி தனது கிரிக்கெட் வாழ்வில் செய்த சாதனைகள் ஏராளம்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 297 கேட்ச்களோடு, அதிக கேட்ச்களை பிடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் (417)மார்க் பவுச்சர்(402) குமார் சங்கக்காரா(383) ஆகியோர் முதல் மூன்று இடத்தில் உள்ளனர். 

2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில்  இந்தியா வெற்றி வாகை சூட முக்கிய பங்காற்றியவர் மகேந்திர சிங் தோனி. 318 ஒருநாள் போட்டிகளில் 107 ஸ்டம்பிங் செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இலங்கையின் குமார் சங்ககாரா 99 ஸ்டம்பிங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் அதிகபட்சமாக  785 முறை விக்கெட்களை கீப்பராக இருந்து வீழ்த்தியுள்ளார். அந்த பட்டியலில் தோனிக்கு மூன்றாவது இடம்.  தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் 998 டிஸ்மிஸல்களுடன்  முதலிடத்தில் உள்ளார்.  ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 905 விக்கெட்டு டிஸ்மிசலுடன் இராண்டாம் இடத்தில் உள்ளார் ‌ 

இந்திய அணி தோனியின் கேப்டன்ஷிப்பில் 50 ஓவர் உலக கோப்பை போட்டியை 2011இல் வென்றது 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்றது. 2013ல் நடந்த ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் கோப்பையை வென்று சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி 33 ரன்கள் எடுத்தால்10 ஆயிரம் ரன்களை கடப்பார்.
  • இந்த சாதனையை படைக்கப் போகும் 4 இந்திய வீரர்
  • உலக அளவில் 12-வது வீரராக பட்டியலில் இணைவார்
தொடர்புடைய கட்டுரைகள்
நாளை தல தோனியின் சரவெடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாமா? - வீடியோ
நாளை தல தோனியின் சரவெடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாமா? - வீடியோ
"விக்கெட்டுகளை வீழ்த்துவதே வெற்றிக்கு அழைத்து செல்லும்" - சஹால்
"விக்கெட்டுகளை வீழ்த்துவதே வெற்றிக்கு அழைத்து செல்லும்" - சஹால்
"சிஎஸ்கே சாம்பார்"... ஆர்சிபி ட்விட்டுக்கு பதிலடி தந்த சூப்பர் கிங்ஸ்!
"சிஎஸ்கே சாம்பார்"... ஆர்சிபி ட்விட்டுக்கு பதிலடி தந்த சூப்பர் கிங்ஸ்!
ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் கோலி-தோனி மோதல்!
ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் கோலி-தோனி மோதல்!
ஆஸ்திரேலிய தொடருக்கு நாளை அணி தேர்வு - உலகக் கோப்பைக்கு முன்னோட்டமா?
ஆஸ்திரேலிய தொடருக்கு நாளை அணி தேர்வு - உலகக் கோப்பைக்கு முன்னோட்டமா?
Advertisement