கிரிக்கெட் மைதானத்தில் டான்ஸ் ஆடிய ஷிகர் தவான்

Updated: 08 September 2018 14:16 IST

கமென்ட்ரி பாக்ஸில் டான்ஸ் மாஸ்டரானார் ஹர்பஜன் சிங் - டேவிட் லாய்ட் ஆட்டம்

India vs England: Inspired By Shikhar Dhawan, Harbhajan Singh Gets David Llyod To Do Bhangra In Commentary Box

கமென்ட்ரி பாக்ஸில் டான்ஸ் மாஸ்டரானார் ஹர்பஜன் சிங் - டேவிட் லாய்ட் ஆட்டம்

ஓவல்: இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இந்நிலையில், 5-வது மற்றும் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தின்போது சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி வீர்ர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை விரைவாக பெவிலியனுக்கு அனுப்பினர். 198 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தபோது, இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். அந்த நேரத்தில் பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ஷிகர் தவானை பங்கரா டான்ஸ் (பஞ்சாபின் பாரம்பரிய ஆட்டம்) ஆடும்படி ரசிகர்கள் வலியுறுத்தினர். குறும்புக்காரரான தவான் ரசிகர்களின் தாளத்திற்கேற்ப ஆட்டம் போட்டார். மைதானத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய ஷிகர் தவானின் இந்த ஆட்டம் வைரல் ஹிட் ஆனது.

இதைப் பார்த்த கமெண்டரி பாக்ஸில் இருந்த டேவிட் லாய்ட், ஹர்பஜன் சிங்கிடம் டான்ஸ் ஸ்டெப் குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த ஹர்பஜன் சிங், இது பஞ்சாபின் பாரம்பரிய நடனம் என்று கூறி, விளக்கம் அளிக்கத் தொடங்கினார். இதில் உற்சாகம் அடைந்த டேவிட் லாய்ட் பங்கரா டான்ஸ் ஆட ஆரம்பித்தார். அவருக்கு ஹர்பஜன் சிங் ஸ்டெப்புகளை சொல்லிக் கொடுக்க, கிரிக்கெட் கமெண்டரி பாக்ஸ் சிறிது நேரத்திற்கு பங்கரா டான்ஸ் ஸ்டூடியோவாக மாறியது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இணையும் மயங்க் அகர்வால்?
ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இணையும் மயங்க் அகர்வால்?
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
"ஷிகர் தவானை அவமதிக்கவில்லை" - விளக்கமளித்த தப்ரைஸ் ஷம்சி!
Advertisement