சமநிலையில் இந்தியா - இங்கிலாந்து, இருபது ஓவர் தொடரை இந்தியா கைப்பற்றுமா?

Updated: 07 July 2018 13:07 IST

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் கலந்து கொள்வார்

India vs England: England Did Their Homework Well To Outplay India, Says Virat Kohli

இந்தியா- இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இறுதி போட்டி பரப்பரப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கார்டிஃப்பில் நேற்று நடைப்பெற்ற இரண்டாவது இருபது ஒவர் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இந்தப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைப்பெற்ற ஒரு நாள் தொடரில் கலந்து கொள்ளவில்லை. தற்போது, உடல் நிலை முன்னேறியுள்ளதால், இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

“இந்தத் தொடரின் முக்கியமான போட்டி என்பதால், சிறப்பான 11 வீரர்களுடன் களமிறங்க உள்ளோம்” என்று இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அலெக்ஸ் ஹேல்சிடம் நிறைய உள்ளது. அதனால் அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடுவார்'' என்றார் மோர்கன்.

எனினும், தொடரின் முதல் போட்டியில், ரன்கள் குவிக்க, இங்கிலாந்தின் ஹேல்ஸ் தடுமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில், எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது. குறிப்பாக,சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 24 ரன்களுக்கு ஐந்து விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

முதல் போட்டிக்குப் பிறகு, சுழற்பந்து இயந்திரத்தின் உதவி மூலம், இங்கிலாந்து அணி வீரர்கள் சுழற்பந்துகளை எதிர்க்கும் பயிற்சியை மேற்கொண்டனர். அதன் பலனாக, இரண்டாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இரண்டாவது போட்டியில் குல்தீப் யாதவ்வால் விக்கெட் எடுக்க முடியவில்லை.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் விராத் கோலி, “தீவிர பயிற்சியால், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் மிடில் ஓவர்களில், போட்டி திசை மாறியது” என்றார்.

இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்களான, டேவிட் வில்லி 18 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும், லியாம் ப்ளன்கெட் 17 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும் எடுத்து, 20 ஓவர் முடிவில் இந்திய அணியை, 148-5 என சுருக்கினர்.

“டேவின் வில்லியின் சிறப்பான பந்து வீச்சு போட்டியின் வெற்றிக்கு உதவியது” என்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்
  • அதனால் மூன்றாவது போட்டி, முக்கியமானதாக அமைந்துள்ளது
  • தீவிர பயிற்சியே இங்கிலாந்து வெற்றிக்கு காரணம், கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
'இந்தியாவின் ஆசிர்வதிக்கப் பட்ட தினம்' - தல தோனியை வாழ்த்திய 'சின்ன தல'
சமநிலையில் இந்தியா - இங்கிலாந்து, இருபது ஓவர் தொடரை இந்தியா கைப்பற்றுமா?
சமநிலையில் இந்தியா - இங்கிலாந்து, இருபது ஓவர் தொடரை இந்தியா கைப்பற்றுமா?
இங்கிலாந்து - இந்தியா இரண்டாவது இருபது ஓவர் போட்டி : தொடரை கைப்பற்ற இந்தியா தீவிரம்
இங்கிலாந்து - இந்தியா இரண்டாவது இருபது ஓவர் போட்டி : தொடரை கைப்பற்ற இந்தியா தீவிரம்
Advertisement