லார்ட்ஸ் மைதானத்தில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதனை படைக்குமா?

Updated: 07 August 2018 12:27 IST

லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டிகளில், முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ், மகேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளது

India vs England: After Kapil Dev And MS Dhoni, Virat Kohli Seeks Win At Lord

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்கம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, அடுத்து நடக்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற உள்ளது.

இதுவரை, லார்ட்ஸ் மைதானத்தில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 11 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டிகளில், முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ், மகேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1932 ஆம் ஆண்டு, சி.கே நாயுடு தலைமையிலான இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் முறை பங்கேற்றது. இங்கிலாந்திற்கு எதிரான இந்த போட்டியில் 158 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

அதனை அடுத்து, 1986 ஆம் ஆண்டு, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, லார்ட்ஸில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்திற்கு எதிரான இந்த போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

2014 ஆம் ஆண்டு, அலாஸ்டெர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியும், தோனி தலைமையிலான இந்திய அணியும் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 95 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது. இதன் மூலம், இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை லார்ட்ஸில் பதிவு செய்தது.

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் பங்கேற்பு

பங்கேற்றுள்ள மொத்த போட்டிகள் : 17

இந்திய அணியின் வெற்றி : 2

இங்கிலாந்து அணியின் வெற்றி : 11

டிரா : 2

1936 - விஜயநகரம் மஹாராஜா (கேப்டன்) – 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

1946 - பட்டோடி நவாப் (கேப்டன்) – 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

1952 - விஜய் ஹசாரே (கேப்டன்) – 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

1959 - பங்கஜ் ராய் (கேப்டன்) – 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

1967 - மன்சூர் அலி கான் பட்டோடி (கேப்டன்) –1 இன்னிங்ஸ், 124 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

1971 - அஜித் வாடேகார் (கேப்டன்) – டிரா

1974 - அஜித் வாடேகார் (கேப்டன்) – டிரா

1979 - ஶ்ரீநிவாஸ் வெங்கட் ராகவன் (கேப்டன்) – டிரா

1982 - சுனில் கவாஸ்கர் (கேப்டன்) – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

1986 - கபில் தேவ் (கேப்டன்) – 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

1990 - மொஹமத் அசாருதீன் (கேப்டன்) – 247 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

1996 - மொஹமத் அசாருதீன் (கேப்டன்) – டிரா

2002 - சவுரவ் கங்குலி (கேப்டன்) – 170 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

2007 - ராகுல் டிராவிட் (கேப்டன்) –டிரா

2011 - மகேந்திர சிங் தோனி (கேப்டன்) – 196 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

2014 - மகேந்திர சிங் தோனி (கேப்டன்) – 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி தொடங்க இருக்கும், இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • லார்ட்ஸ் மைதானத்தில், 17 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது
  • அதில், 11 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது
  • கபில் தேவ், தோனி தலமையிலான இந்திய அணி, தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
"கோபி பிரயன்ட் இறப்பு செய்தியை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனேன்" - விராட் கோலி!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
Advertisement