ஆண்டர்சன் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சரிந்தது இந்தியா

Updated: 11 August 2018 12:01 IST

இந்தியா, இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது

India vs England, 2nd Test: James Andersons Five-Wicket Haul Demolishes India On Day 2
© Twitter

இந்தியா, இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இது அவர் லார்ட்ஸ் மைதானத்தில் பெறும் ஆறாவது 5 விக்கெட்கள்.

முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், 2-வது நாள் தான் போட்டி தொடங்கியது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே இந்திய அணி தடுமாறி வந்தது. இறுதியில் 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 29 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான, முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமலும், ராகுல் 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். புஜாரா ஒரு ரன்னில் ரன் அவுட்டாக, கோலி மட்டும் போராடி 23 ரன்கள் எடுத்தார்.

ஒரு கட்டத்தில் ரஹானேவும், கோலியும் இணைந்து 34 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். ஆனால் இம்முறை வோக்ஸ் அந்த இணைய உடைத்தார். ரஹானே 18 ரன்கள் அடித்தார், ஹர்திக் பாண்டியா 11 ரன்களும், தினேஷ் கார்த்திக் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

முன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து இன்று பேட்டிங் செய்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தென்னாப்பிரிக்காவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு "கம் பேக்" கொடுக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், மார்க் வூட்!
தென்னாப்பிரிக்காவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு "கம் பேக்" கொடுக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், மார்க் வூட்!
முதலிடத்தை தக்கவைத்து கொண்ட விராத் கோலி...!
முதலிடத்தை தக்கவைத்து கொண்ட விராத் கோலி...!
"நான்கு ரன்களை நடுவரிடம் திரும்ப பெற சொன்னார் ஸ்டோக்ஸ்" : ஆண்டர்சன்
"நான்கு ரன்களை நடுவரிடம் திரும்ப பெற சொன்னார் ஸ்டோக்ஸ்" : ஆண்டர்சன்
சன்ஸ்க்ரீன் லோஷன் மற்றும் உப்புத்தாள் கொண்டு பந்தை சேதப்படுத்தினோம் - பனேசார்
சன்ஸ்க்ரீன் லோஷன் மற்றும் உப்புத்தாள் கொண்டு பந்தை சேதப்படுத்தினோம் - பனேசார்
இமேஜின் பாடலுக்கு ஐசிசி கிளப்பிய ஆன்லைன் ட்ரெண்ட் "தல தோனி வெர்ஷன்"
இமேஜின் பாடலுக்கு ஐசிசி கிளப்பிய ஆன்லைன் ட்ரெண்ட் "தல தோனி வெர்ஷன்"
Advertisement