India vs Bangladesh: 2வது போட்டியின் போது பொறுமையை இழந்த ரோஹித் ஷர்மா!

Updated: 08 November 2019 14:45 IST

போட்டியின் 13 வது ஓவரில், யுஸ்வேந்திர சாஹலின் ஒரு பந்து வீச்சில் சவுமியா சர்க்காரை ரிஷப் பன்ட் ஸ்டம்பிங் செய்ததன் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Rohit Sharma Loses Cool After Error On Giant Screen. Watch
India vs Bangladesh: இரண்டாவது டி20 போட்டியின் போது ரோஹித் ஷர்மா தனது பொறுமையை இழந்தார். © Twitter

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது ரோஹித் ஷர்மா தனது பொறுமையை இழந்தார். காரணம் பெரிய திரையில் சவுமியா சர்கார் அவுட் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. போட்டியின் 13 வது ஓவரில், யுஸ்வேந்திர சாஹலின் ஒரு பந்து வீச்சில் சவுமியா சர்க்காரை ரிஷப் பன்ட் ஸ்டம்பிங் செய்ததன் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆன்-பீல்ட் நடுவர்கள் ஆரம்பத்தில் அவரை வெளியேற்றினர், ஆனால் பின்னர் மூன்றாவது நடுவர் அனில் சவுத்ரிக்கு ஸ்டம்பிங் சரிபார்க்க சிக்னல் செய்யப்பட்டது. சவுமியா சர்க்கார் அதுவரை எல்லைக் கோட்டின் அருகே காத்திருந்தார். மாபெரும் திரை 'நாட் அவுட்' என்ற முடிவைக் காட்டியது, ஸ்டாண்ட்-இன் கேப்டன் ரோஹித் ஷர்மா கோபமடைந்தார். இருப்பினும், நான்காவது நடுவர் இந்த முடிவை டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு தெரிவித்ததால், சவுமியா சர்க்கார் மீண்டும் டிரெஸ்ஸிங் ரூமுக்கு அனுப்பப்பட்டார்.

சவுமியா சர்க்கார் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஆட்டம் இரண்டு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர் கொண்டிருந்தது. இருப்பினும், அவரது முயற்சிகள் பங்களாதேஷை தொடர்ச்சியாக வெற்றியைப் பதிவு செய்ய உதவவில்லை, ஏனெனில் இந்தியா பங்களாதேஷை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. மூன்றாவது மற்றும் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது.

டி20 தொடருக்குப் பிறகு, நவம்பர் 14ம் தேதி முதல் இண்டோரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்தியா பங்களாதேஷுடன் ஆடவுள்ளது. 

ஈடன் கார்டனில் நடைபெறும் இரண்டாவது போட்டி, இந்தியாவில் நடைபெறவுள்ள முதல் பகல்-இரவு டெஸ்ட்டாகும், இது நவம்பர் 22 முதல் நடைபெற உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
India vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
India vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 போட்டி: எப்போது தொடங்குகிறது?
இந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 போட்டி: எப்போது தொடங்குகிறது?
ரோஹித் ஷர்மாவுக்கு 100வது டி20 போட்டிக்கான தொப்பி வழங்கியது யார் தெரியுமா?
ரோஹித் ஷர்மாவுக்கு 100வது டி20 போட்டிக்கான தொப்பி வழங்கியது யார் தெரியுமா?
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
Advertisement