India vs Ban 1st Test Highlights - வங்கதேசத்தைத் தவிடுபொடியாக்கி இந்தியா வெற்றி!

Updated: 16 November 2019 16:27 IST

Ind vs Ban Highlights: இரண்டாம் நாள் ஸ்டம்பில் இந்தியா 343 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

India vs Bangladesh 1st Test Day 3 Today Match LIVE Score, IND vs BAN Live Cricket Score: India Look To Extend Dominance On Day 3
Ind vs Ban Highlights: இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து இந்தியா சார்பில் முகமது ஷமி, அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். © AFP

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா, இந்தூர் மைதானத்தில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது இந்தியா. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும். 

மூன்றாவது நாளான இன்று தேனீர் இடைவேளையை அடுத்து, வங்கதேசத்தை இரண்டாவது இன்னிங்ஸில் ஆல்-அவுட் ஆக்கி வெற்றிவாகை சூடியது இந்தியா. அந்த அணி சார்பில் முஷ்ஃபிக்கிர் ரஹீம் மட்டும் அரை சதம் கண்டார். 

வங்கதேசம், தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 493 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. 343 ரன்கள் லீடிங் இருந்த நிலையில், வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்நிலையில் அந்த அணி 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பறிதாபமாக தோல்வியைத் தழுவியது. இந்தியா சார்பில் தொடக்க வீரர்களில் ஒருவரான மயான்க் அகர்வால், இரட்டை சதம் விளாசினார். இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து இந்தியா சார்பில் முகமது ஷமி, அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

(ஸ்கோர்கார்டு)

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் முதல் நாள் இண்டோரின் ஹோல்கர் மைதானத்தில் நடக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Ban 1st Test Highlights - வங்கதேசத்தைத் தவிடுபொடியாக்கி இந்தியா வெற்றி!
India vs Ban 1st Test Highlights - வங்கதேசத்தைத் தவிடுபொடியாக்கி இந்தியா வெற்றி!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் மயங்க் அகர்வால்!
India vs Bangladesh: டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் மயங்க் அகர்வால்!
India vs Bangladesh: டெஸ்ட் போட்டிகளில் 3வது சதத்தை குவித்தார் அகர்வால்!
India vs Bangladesh: டெஸ்ட் போட்டிகளில் 3வது சதத்தை குவித்தார் அகர்வால்!
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
Advertisement