''மரியாதை தெரியாதவர்'' கோலியை விளாசும் ஜான்ஸன்

Updated: 20 December 2018 10:34 IST

"விராட் கோலியின் செயல் மரியாதைக்குறைவானது மற்றும் மோசமானது" என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மிச்சல் ஜான்சன் கூறியுள்ளார்.

Virat Kohli Is "Disrespectful, Silly": Mitchell Johnson Slams India Skipper
விராட் கோலிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் இடையேயான மோதல் ஊடங்களில் முக்கிய செய்தியாகியுள்ளது. © Twitter

இந்திய கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் இடையேயான மோதல் ஊடங்களில் முக்கிய செய்தியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மிச்சல் ஜான்சன் "விராட் கோலியின் செயல் மரியாதைக்குறைவானது மற்றும் மோசமானது" என்று கூறியுள்ளார். "ஆட்டத்தின் இறுதியில் ஒரு நல்ல போட்டிக்கு அடையாளம் கைகுலுக்கி செல்வதுதான். ஆனால், கோலி அந்தச் சூழலை உருவாக்க மறுக்கிறார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

"பெர்த் டெஸ்ட் முடிந்ததும் விராட் பெய்னிடம் கைகுலுக்குவதை தவிர்த்தது மரியாதைக்குறைவான செயல்" என்றார்.

இருநாடுகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியின் போது கோலி பெய்னை பார்த்து ''நீங்கள் வெறும் ஆக்டிங் கேப்டன் தான்'' என்று வசைபாடியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டெம்ப் மைக்கில் இது போன்ற வார்த்தை எதுவும் பதிவாகவில்லை.

"கோலியும் எந்த விதமான தனிமனித கருத்துக்களையும் அங்கு வெளிப்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார். பெய்னும், "கோலியின் நடவடிக்கைகள் என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டிருந்த போது ஸ்டெம்ப்பை அடிப்பதற்கு பதிலாக பந்தால் கோலியை அடித்தது. வார்த்தை பரிமாற்றம் என மெல்பெர்ன் போட்டியில் நடந்த ஸ்லெட்ஜிங் பெரிதாக பேசப்பட்டது. 

(With AFP Inputs)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு முன்பு தோனி, கோலி குறித்து க்ருணால் பேசிய பாண்ட்யா!
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு முன்பு தோனி, கோலி குறித்து க்ருணால் பேசிய பாண்ட்யா!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்: அனைத்து விதமான போட்டிகளுக்கு கோலி தான் கேப்டன்!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்: அனைத்து விதமான போட்டிகளுக்கு கோலி தான் கேப்டன்!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்... இந்திய அணி ஜூலை 21ம் தேதி தேர்வு!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்... இந்திய அணி ஜூலை 21ம் தேதி தேர்வு!
லண்டனிலிருந்து நாடு திரும்பிய கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா!
லண்டனிலிருந்து நாடு திரும்பிய கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா!
கோலி அவுட், தோனி டவுட் - மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவர்?
கோலி அவுட், தோனி டவுட் - மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவர்?
Advertisement