Listen to the latest songs, only on JioSaavn.com
 

தோனியை கடந்து முன்னேறிய பண்ட்

Updated: 08 January 2019 14:32 IST

புஜாரா, அகர்வால், பண்ட் தரவரிசையில் முன்னேற்றம்.

India vs Australia: Rishabh Pant Attains Joint-Highest Rating For Indian Wicket-Keeper Batsman In ICC Test Player Rankings
டெஸ்ட் தொடரில் பண்ட் 320 ரன்கள் குவித்தார் © Twitter

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் தொடரில் 320 ரன்களும் 20 கேட்ச்சுகளையும் எடுத்த ரிஷப் பண்ட், 21 இடங்கள் முன்னேறி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 17 வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய விக்கெட் கிப்பர் ஒருவர் அதிகபட்சமாக 17 வது இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை ஃபரூக் இன்ஜினியர் 1973 ஆம் ஆண்டு செய்திருந்தார். தற்போது அந்த சாதனையை பண்ட் சமன் செய்துள்ளார்.

தோனி அதிகபட்சமாக 19 வது இடத்தில் இருந்தார். 673 புள்ளிகளுடன் 17 வது இடத்தில் இருக்கும் பண்ட், இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளே விளையாடியுள்ளார்.

தொடர் நாயகன் விருது பெற்ற புஜாரா, மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். முதல் இடத்தில் கோலி கிங்காக நீடிக்கிறார். இவர்களைத் தவிர கடைசி போட்டியில் அரைசதம் அடித்த ஜடேஜா 57 வது இடத்திற்கு முன்னேறினார். இந்திய அணியின் புதிய தொடக்க வீரரான மயன்க் அகர்வால், 62 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், கடைசி போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்திய குல்தீப் யாதவ், 45 வது இடத்துக்கும் முகமது சமி 22 வது இடத்திற்கும் முன்னேறினார். காயம் காரணமாக கடைசி மூன்று போட்டிகளில் விளையாடாத அஸ்வின், 9 வது இடத்துக்கு சரிந்துள்ளார். ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 5 வது இடத்தில் உள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • புஜாரா தொடர் நாயகன் விருதை பெற்றிருந்தார்
  • ஜடேஜா, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரவரிசையில் முன்னேற்றம்
  • கோலி தொடர்ந்து முதலிடம்
தொடர்புடைய கட்டுரைகள்
சாஹல் டிவியில் தன்னுடைய வீட்டு வெர்ஷனை வெளியிட்டர் யுஸ்வேந்திர சாஹல்!
சாஹல் டிவியில் தன்னுடைய வீட்டு வெர்ஷனை வெளியிட்டர் யுஸ்வேந்திர சாஹல்!
“தொடர்ந்து கனவு காணுங்கள்” - மும்பை இந்தியன்ஸில் ட்விட்டுக்கு வேடிக்கையாக பதிலளித்த சாஹல்!
“தொடர்ந்து கனவு காணுங்கள்” - மும்பை இந்தியன்ஸில் ட்விட்டுக்கு வேடிக்கையாக பதிலளித்த சாஹல்!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
கொரோனா வைரஸ்: விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய கோலி மற்றும் அனுஷ்கா!
கொரோனா வைரஸ்: விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய கோலி மற்றும் அனுஷ்கா!
“வெளியே செல்லாதீர்கள்... உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது” - ரோஹித் ஷர்மா!
“வெளியே செல்லாதீர்கள்... உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் உள்ளது” - ரோஹித் ஷர்மா!
Advertisement