''எங்கு இறங்கினாலும் ஆடுவேன்'' - தோனியின் சிறப்பான, தரமான சம்பவம்!

Updated: 22 January 2019 12:28 IST

தொடரில் 193 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார் தோனி

India vs Australia: MS Dhoni Says He Is Happy To Bat At Any Number
MS Dhoni: தோனி கடைசி போட்டியில் அபாரமாக ஆடி 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். © AFP

இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் அரை சதமடித்து தொடர் நாயகன் விருதை பெற்றார். இந்தியா இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தியா ஆஸ்திரேலியாவில் இருநாடுகளுக்கிடையேயான தொடரை வெல்வது இதுவே முதல் முறை.

தோனி கடைசி போட்டியில் அபாரமாக ஆடி 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த தொடரில் 193 ரன்களை குவித்து அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தொடர்நாயகன் விருதை பெற்ற பின்பு பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய தோனி "14 வருடங்களாக கிரிக்கெட் ஆடிய பின்பு எந்த இடத்துக்கு இறங்கினாலும் மகிழ்ச்சிதான். நான் ஆறாவது இடம் பிடிக்கவில்லை, நான்காவது இடத்தில்  ஆட இறங்குகிறேன் என்று எப்போதும் கூறியதில்லை" என்றார்.

கடைசி போட்டியில் கேதர் ஜாதவுடன் இணைந்து வெற்றிக்கான பார்ட்னர் ஷிப்பை தோனி உருவாக்கினார். இதனால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாதவையும் தோனி பாராட்டினார்.

''மெதுவான ஆடுகளத்தில் ரன் குவிப்பது கடினம். கடைசி வரை ஆட்டத்தை எடுத்து சென்று சரியாக எந்த பந்துவீச்சாளரை டார்கெட் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு ஆடவேண்டும். அதனால் தான் நடுவே அம்பயர்களிடம் யாருக்கு எத்தனை ஓவர்கள் மீதமிருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டேன். ஜாதவ் முக்கியமான பந்துகளை பவுண்டரிக்கு விளாசி ஆட்டத்தை நம் பக்கம் திருப்பினார்" என்றார்.

இந்தியா அடுத்து வரும் ஜனவரி 23ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நியூசிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தோனி தொடர் நாயகன் விருதை பெற்றார்
  • தோனி விமர்சனங்களை எதிர்கொண்டு ஆட்டங்களை வெற்றிக்கு அழைத்து செல்கிறார்
  • இந்தியாவுக்கான அடுத்த போட்டி வரும் ஜனவரி 23ம் தேதி துவங்குகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
Advertisement