2வது ஒருநாள் போட்டி: 8 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி! #Highlights

Updated: 05 March 2019 21:31 IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

India vs Australia Live Cricket Score, Ind vs Aus 2nd ODI Live Match Updates: India Look To Extend Series Lead
© AFP

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது. இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். முதல் போட்டியில் பொறுப்புடன் ஆடிய கோலி 44 ரன்களையும், ரோஹித் 35 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன் பின் ஜோடி சேர்ந்த தோனி ஜாதவ் இணை கூட்டாக 141 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. . ஜடேஜாவின் பந்துவீச்சும் அபாரமாக இருந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் ஆஷ்டன் டர்னர், பெகன்ட்ராஃப் நீக்கப்பட்டு மார்ஷ் மற்றும் லயன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்:

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா

ஆஸ்திரேலியா:

ஆரோன் பின்ச்(கேப்டன்), மார்கஸ் ஸ்டோனின்ஸ், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரே, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஷான் மார்ஷ், ஆடம் ஸம்பா, நாதன் லயன், பாட் கம்மின்ஸ், நாதன் கோல்டர் நைல்

ஓவர் 1:

கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் ஆறு பந்துகளையும் சந்தித்து ரன் எடுக்காமல் மெய்டனாக்கி, கடைசி பந்தில் ஸம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓவர் 5:

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 9 ரன்களுடனும், தவான் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 9:

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 16 ரன்களோடு களத்தில் உள்ளார். தவான் 21 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் பந்தில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஓவர் 15:

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 25 ரன்களுடனும், ராயுடு 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 17:

17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 31 ரன்களோடு களத்தில் உள்ளார். ராயுடு 18 ரன்கள் எடுத்து லயன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஓவர் 20:

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது . கேப்டன் கோலி 44 ரன்களுடனும், விஜய் சங்கர் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.

ஓவர் 25:

25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது . கேப்டன் கோலி 51 ரன்களுடனும், விஜய் சங்கர் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளார். கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

 

ஓவர் 30:

30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 63 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளார். அதிரடியாக ஆடிவந்த விஜய் சங்கர் 41 பந்தில் 46 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

 

 

ஓவர் 33:

33 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 67 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார். கேதர் ஜாதவ் 7 ரன்னிலும், தோனி ரன் ஏதும் எடுக்காமலும் ஸம்பா பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஓவர் 40:

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 88 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் ஆடி வருகிறார்கள்.

 

ஓவர் 44:

44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி அபாரமாக ஆடி 9 பவுண்டரிகளுடன் 110 பந்தில் 105 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். இன்றைய சதத்துடன் சேர்த்து கோலி ஒருநாள் போட்டிகளில் 40 சதங்களை அடித்துள்ளார். ஜடேஜா 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஓவர் 46:

46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 110 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜடேஜா 21 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓவர் 48:

48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது . கோலி 116 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஸ்டோனின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் அதே ஓவரில் 3 ரன்னில் அவுட் ஆனார்.

ஓவர் 48.2:

48.2 ஓவரில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

முன்னதாக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய இறுதிகட்டத்தில் சிறப்பாக பந்துவீசி இந்தியாவை கட்டுப்படுத்தியது. இந்திய தரப்பில் கேப்டன் கோலி 116 ரன்களும், விஜய் சங்கர் 46 ரன்களும் , ஜடேஜா, தவான் தலா 21 ரன்களும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஸம்பா 2 விக்கெட்டுகளையும், கோல்டர்நைல், மேக்ஸ்வெல், லயன் தலா ஒரு விக்கெடையும் வீழ்த்தினர்.

ஓவர் 5:

251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய ஆஸ்திரேலியா, அதிரடியாக ஆட்டத்தை துவங்கியுள்ளது. 5 ஓவர் முடிவில் கவாஜா 14 ரன்களுடனும், பின்ச் 13 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ஆஸி. விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் குவித்துள்ளது.

ஓவர் 10:

10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவித்துள்ளது.  கவாஜா 28 ரன்களுடனும், பின்ச் 26 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இன்னும் 240 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 191 ரன்கள் தேவை.

ஓவர் 15:

15 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் குவித்துள்ளது.  கவாஜா 38 ரன்னுக்கும், பின்ச் 37  ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். குல்தீப் மற்றும் ஜாதவ் விக்கெட்டை வீழ்த்தினர்.  210 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 168 ரன்கள் தேவை.

ஓவர் 20:

20 ஓவர் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் குவித்துள்ளது. மார்ஷ் 12 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 11 ரன்னுடனும் ஆடி வருகின்றனர். 180 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 145 ரன்கள் தேவை.

ஓவர் 24:

24 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்துள்ளது.  மார்ஷ் 16 ரன்னில் ஜடேஜா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் 22 ரன்னுடன் ஆடி வருகிறார். 156 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 127 ரன்கள் தேவை.

ஓவர் 29:

29 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்துள்ளது.  மேக்ஸ்வெல் 4 ரன்னில் குல்தீப் பந்தில் போல்டானார். ஹேண்ட்ஸ்கோம்ப் 28 ரன்னுடன் ஆடி வருகிறார். 126 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 116 ரன்கள் தேவை.

ஓவர் 35:

35 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4  இழப்புக்கு 153 ரன்கள் குவித்துள்ளது.   ஹேண்ட்ஸ்கோம்ப் 36 ரன்னுடனும் ஸ்டோலிஸ் 12 ரன்னுடனும் ஆடி வருகிறார்கள். 90 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 97 ரன்கள் தேவை.

ஓவர் 38:

38 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4  இழப்புக்கு 175 ரன்கள் குவித்துள்ளது.   ஹேண்ட்ஸ்கோம்ப் 48 ரன்னில் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். 72 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 76 ரன்கள் தேவை.

ஓவர் 40:

40 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5  இழப்புக்கு 186 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டோனின்ஸ் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 60 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 65 ரன்கள் தேவை.

ஓவர் 45:

45 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 6  இழப்புக்கு 222 ரன்கள் குவித்துள்ளது. கேரே 22 ரன்னில் குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். 30 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 29 ரன்கள் தேவை.

ஓவர் 46:

46 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 இழப்புக்கு 223 ரன்கள் குவித்துள்ளது. கோல்டர் நைல் 4 ரன்னிலும், கம்மின்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். 24 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 28 ரன்கள் தேவை.

ஓவர் 47:

47 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 இழப்புக்கு 230 ரன்கள் குவித்துள்ளது. 18 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 21 ரன்கள் தேவை.

ஓவர் 48:

48 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 இழப்புக்கு 231 ரன்கள் குவித்துள்ளது. 12 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 20 ரன்கள் தேவை.

ஓவர் 49:

49 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 இழப்புக்கு 240 ரன்கள் குவித்துள்ளது. 6 பந்தில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 11 ரன்கள் தேவை.

ஓவர் 50:

ஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்று பந்துச்சை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலிய இறுதிகட்டத்தில் சிறப்பாக பந்துவீசி இந்தியாவை கட்டுப்படுத்தியது. இந்திய தரப்பில் கேப்டன் கோலி 116 ரன்களும், விஜய் சங்கர் 46 ரன்களும் , ஜடேஜா, தவான் தலா 21 ரன்களும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஸம்பா 2 விக்கெட்டுகளையும், கோல்டர்நைல், மேக்ஸ்வெல், லயன் தலா ஒரு விக்கெடையும் வீழ்த்தினர்.

பின்னர் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா .
ஆஸி தரப்பில் ஸ்டோனின்ஸ் 52 ரன்களையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 48 ரன்களை குவித்தனர்.

இந்திய தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
500வது வெற்றி குறித்து சாஹல் டிவியில் கோலி, விஜய் சங்கர் சுவாரஸ்ய பதில்!
500வது வெற்றி குறித்து சாஹல் டிவியில் கோலி, விஜய் சங்கர் சுவாரஸ்ய பதில்!
ஆஸ்திரேலியாவை கலங்க வைத்த "கிங் ஆஃப் டெத் ஓவர்ஸ்" பும்ரா
ஆஸ்திரேலியாவை கலங்க வைத்த "கிங் ஆஃப் டெத் ஓவர்ஸ்" பும்ரா
2வது ஒருநாள் போட்டி: 8 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி! #Highlights
2வது ஒருநாள் போட்டி: 8 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி! #Highlights
Advertisement