Listen to the latest songs, only on JioSaavn.com
 

லேடி கோலி மந்தனா அதிரடி: அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்தது இந்தியா

Updated: 18 November 2018 00:16 IST

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 55 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். கேப்டப் ஹர்மன்ப்ரீத் கவுரும் 27 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.

Ind vs Aus Highlights Cricket Score, India vs Australia Women’s World T20: India Outclass Australia By 48 Runs To Top Group B
எதிர்த்து ஆடிய ஆஸ்திரேலிய இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் 119 ரன்களுக்கு 19.4 ஓவரில் ஆட்டமிழந்தது. © Twitter

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் பி பிரிவின் முக்கியமான ஆட்டத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த பிரிவில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதுவது மட்டுமல்லாமல் இந்த பிரிவில் முதலிடம் பிடிக்கப்போவது யாரு என்பதை தீர்மானிக்கும் போட்டியாகவும் இது அமைந்தது. டாஸில் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்தத் தொடரின் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த மிதாலி ராஜ், இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஆடவில்லை.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 55 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். கேப்டப் ஹர்மன்ப்ரீத் கவுரும் 27 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது.

எதிர்த்து ஆடிய ஆஸ்திரேலிய இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் 119 ரன்களுக்கு 19.4 ஓவரில் ஆட்டமிழந்தது. இந்தியா இந்த போட்டியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் அரையிறுதி போட்டியை உறுதி செய்ததுடன் மட்டுமல்லாமல் பி பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

பி பிரிவிக் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அல்லது இங்கிலாந்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள்: மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள்: மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது!
5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா
5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
2வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!
2வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!
INDvNZ 1st test Day 1: இந்தியா 242/10... நியூசிலாந்து ஆட்டமிழக்காமல் 63 ரன்கள்!
INDvNZ 1st test Day 1: இந்தியா 242/10... நியூசிலாந்து ஆட்டமிழக்காமல் 63 ரன்கள்!
Advertisement