ராகுல் - விஜய் அவுட், அகர்வால், ஜடேஜா இன்

Updated: 25 December 2018 10:40 IST

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் நாளை மெல்போன் எம்சிஜி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நாளை டெஸ்டில் களமிறங்க இருக்கும் அணி விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது

India vs Australia: India Announce Playing XI For Melbourne Test, Mayank Agarwal To Debut, Ravindra Jadeja Returns
மூன்றாவது டெஸ்ட்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது © Twitter/BCCI

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் நாளை மெல்போன் எம்சிஜி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நாளை டெஸ்டில் களமிறங்க இருக்கும் அணி விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட மாற்றமாக, கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகியோர் நீக்கப்பட்டு அறிமுக வீரராக மயான்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து ஹனுமா விகாரி தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிசிசிஐ டிவீட்டரில் செய்த ட்வீட் :

இரண்டாவது டெஸ்டில் காயம் காரணமாக களமிறங்காத ரோஹித் சர்மா அணிக்கு திரும்பி இருக்கிறார். ஒரு நாள் போட்டிகளிலும் டி20 களிலும் இந்தியாவிற்காக தொடக்க வீரராக களமிறங்கும் ரோஹித் சர்மா, இந்த டெஸ்டில் தொடக்க வீரராக களமிறங்குவாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இரண்டாவது டெஸ்டில் காயம் காரணமாக களமிறங்காத அஸ்வின், இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் அறிவிக்கபட்டுள்ள 11 பேர் கொண்ட அணியில் அவர் இல்லை. மேலும் பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

ராகுல் – விஜய் இருவரும் சேர்ந்து முதல் இரண்டு டெஸ்டுகளில் வெறும் 95 ரன்களே எடுத்துள்ளனர். கிறிஸ்துமஸ் அடுத்த நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் பாக்ஸிங் டே போட்டி என அழைக்கப்படும். இந்த பாக்ஸிங் டே போட்டிகள் மிகவும் முக்கியமானதாக உள்ளூர் மக்கள் எதிர்பார்பார்கள். மேலும் 90,000 பேர் இந்த போட்டியை நேரில் காண வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றமாக பீட்டர் ஹாண்ட்ஸ்கோப்க்கு பதிலாக மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கபட்டுள்ளார்.

இந்த தொடர் 1 – 1 என சமநிலையில் இருப்பதால் நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.

அணி விவரம் :

இந்தியா: மயான்க் அகர்வால், ஹனுமா விஹாரி, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா, ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமத் சமி, பும்ரா.

  ஆஸ்திரேலியா : ஆரோன் ஃபின்ச், ஹாரிஸ், உஷ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், திரவிஸ் ஹெத், டிம் பைன் (கேப்டன்), பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஜோஷ் ஹாசல்வுத்.

(With AFP inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • விஜய் - ராகுல் நீக்கபட்டுள்ளனர்
  • அகர்வால் புதிதாக சேர்க்கபட்டுள்ளார்
  • அஸ்வின் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு முன்பு தோனி, கோலி குறித்து க்ருணால் பேசிய பாண்ட்யா!
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு முன்பு தோனி, கோலி குறித்து க்ருணால் பேசிய பாண்ட்யா!
டிஎன்பிஎல் போட்டியில் வினோத பந்துவீச்சுக்கு பாராட்டு பெற்ற அஸ்வின்!
டிஎன்பிஎல் போட்டியில் வினோத பந்துவீச்சுக்கு பாராட்டு பெற்ற அஸ்வின்!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
இந்தியாவுக்கு எதிரான டி20: மேற்கிந்திய தீவுகள் அணியில் நரைன், பொலார்ட்
இந்தியாவுக்கு எதிரான டி20: மேற்கிந்திய தீவுகள் அணியில் நரைன், பொலார்ட்
தோனியின் ராணுவ பயிற்சிக்கு பதிலளித்த டேவிட் லாய்ட்... அவரை கலாய்த்த ரசிகர்கள்!
தோனியின் ராணுவ பயிற்சிக்கு பதிலளித்த டேவிட் லாய்ட்... அவரை கலாய்த்த ரசிகர்கள்!
Advertisement