முதல் டி20 சர்ச்சை: தோனிக்கு ஆதரவாக பேசிய ஆஸ்திரேலிய வீரர்!

Updated: 25 February 2019 19:49 IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. அதில் தோனியின் பேட்டிங் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

Glenn Maxwell Comes To MS Dhonis Defence For Farming Strike During 1st T20I
பும்ரா அருமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். © AFP

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. அதில் தோனியின் பேட்டிங் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதற்கு ஆஸ்திரேலிய அணி வீரர் ஒருவரிடமிருந்து தோனிக்கு ஆதரவான கருத்து வந்துள்ளது. 29 ரன்களுக்குள் மிடில் ஆர்டர் முழுவதையும் இந்தியா இழந்தது. 109க்கு 7 என்ற நிலையிலிருந்து 19 பந்துகளை சந்தித்தது. மேலும், தோனி 37 பந்துகளை சந்தித்து 29 ரன்களை குவித்தார். ஆமை வேகத்தில் ஆடினார் என்று விமர்சிக்கப்பட்டார். 

இது குறித்து பேசிய மேக்ஸ்வெல் ''தோனி சிறப்பாக தான் ஆடினார். பிட்ச் பேட் செய்ய கடினமான சூழலில் இருந்தது. அவ்வளவு விக்கெட்டுகள் போன பின்பும் பேட்ஸ்மேனால் சிறப்பாக ஆட முடியாது. கடைசி ஓவரில் சஹால் ஒன்றும் ஹிட்டர் இல்லை அதனால் அவருக்கு ஸ்ட்ரைக் வழங்கவும் முடியாது. அதனால் தான் தோனியால் பந்தை பவுண்டரிக்கு விரட்டமுடியவில்லை" என்றார்.

மேலும், "தோனி ஒரு உலக அளவில் சிறந்த பினிஷர். அவர் ஆடியது சிறந்த ஆட்டம் தான். அவர் அடித்து ஆடியது கடினமான பிட்ச் என்பதை உணர வேண்டும்" என்றார்.

ராகுலின் அரைசதத்துடன் இந்தியா 126 ரன்கள் குவித்தது. 127 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா கடைசி பந்தில் வெற்றி பெற்றது. பும்ரா அருமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடைசி 3 பந்தில் 7 ரன் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் கம்மின்ஸ். இந்த தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் டி20 போட்டியில் தோனி 37 பந்துகளை சந்தித்து 29 ரன்களை குவித்தார்
  • 127 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா கடைசி பந்தில் வெற்றி பெற்றது
  • ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
மார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி!
மார்ச் 2ம் தேதி முதல் ஐபிஎல் பயிற்சியை தொடங்கும் எம்.எஸ்.தோனி!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
Advertisement