நிறைவுற்ற போட்டிகள்   
மூன்றாவது ஒரு நாள் ஆட்டம், ஜேஎஸ்ஸிஏ இண்டெர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ், ராஞ்சி, Mar 08, 2019
இந்தியா இந்தியா
281 (48.2)
ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
313/5 (50.0)
ஆஸ்திரேலியா இந்தியா-ஐ 32 ரன்களில் தோற்கடித்தது

3வது ஒருநாள் போட்டி: கோலி சதம் வீண்... இந்தியா போராடி தோல்வி #Highlights

Updated:08 March 2019 21:22 IST

ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India Vs Australia live score and match upadtes: 3rd ODI live updates from Ranchi

இந்திய ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறும் இந்த போட்டி தான் ராஞ்சியில் தோனியின் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய அதே அணியே ஆடுகிறது. எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்று பேசிய கோலி இந்த போட்டிக்கான சம்பளத்தை அணி முழுவதும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு அளிப்பதாக தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியில் கோல்டர் நைலுக்கு பதிலாக ஜெய் ரிச்சர்ட்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்:

இந்தியா: 

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜஸ்ப்ரித் பும்ராஹ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா

ஆஸ்திரேலியா:

ஆரோன் பின்ச்(கேப்டன்), மார்கஸ் ஸ்டோனின்ஸ், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரே, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஷான் மார்ஷ், ஆடம் ஸம்பா, நாதன் லயன், பாட் கம்மின்ஸ், ஜெய் ரிச்சர்ட்ஸன்

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது இந்தியா. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா கவாஜாவின் அபார சதம், பின்ச் 93, மேக்ஸ்வெல் 47 என அதிரடியாக ரன் குவிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது இந்தியா. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா கவாஜாவின் அபார சதம், பின்ச் 93, மேக்ஸ்வெல் 47 என அதிரடியாக ரன் குவிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 314 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 48.2 ஓவரில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கோலி 123 ரன்களும், விஜய் சங்கர் 32 ரன்களு, ஜாதவ் , தோனி தலா 26 ரன்களும் குவித்தனர். ஆஸி தரப்பில் ஸம்பா, ரிச்சர்ட்ஸன், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

ராஞ்சி JSCA சர்வதேச மைதானத்திலிருந்து இந்தியா - ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி ஹைலைட்ஸ்

 • 21:15 (IST)Mar 08, 2019

  ஓவர் 48.2:

  48.2 ஓவரில் 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. ஆஸ்திரேலியா இந்தப் போட்டியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
 • 21:11 (IST)Mar 08, 2019

  ஓவர் 48:

  47.5 ஓவரில் ரிச்சர்ட்ஸன் வீசிய பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஷமி. கடைசி 12 பந்தில் 33 ரன்கள் தேவை.
 • 21:06 (IST)Mar 08, 2019

  ஓவர் 47.1:

  47.1 ஓவரில் ரிச்சர்ட்ஸன் வீசிய பந்தில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஜடேஜா. இந்தியாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.
 • 21:04 (IST)Mar 08, 2019

  ஓவர் 47:

  47 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா பொறுப்பை உணர்ந்து ஆடி வருகிறார். இந்தியா வெற்றி பெற இன்னும் 18 பந்தில்  41 ரன்கள் தேவை.
 • 20:53 (IST)Mar 08, 2019

  ஓவர் 43:

  43 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை எடுத்துள்ளது. விஜய் சங்கர் 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.  இந்தியா வெற்றி பெற இன்னும் 42 பந்தில் 63 ரன்கள் தேவை.
 • 20:41 (IST)Mar 08, 2019

  ஓவர் 41:

  41 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை எடுத்துள்ளது. விஜய் சங்கர் 19 ரன்னுடன் ஆடி வருகிறார். இந்தியா வெற்றிபெற இன்னும் 54 பந்தில்  83 ரன்கள் தேவை.
 • 20:27 (IST)Mar 08, 2019

  ஓவர் 37.3:

  37.3 ஓவர் முடிவில் இந்தியா 6  விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை எடுத்துள்ளது. அபாரமாக ஆடி சதமடித்த கோலி 123 ரன்னில் ஸம்பா பந்தில் போல்டானார்.  இந்தியா வெற்றி பெற 75 பந்தில் 95 ரன்கள் தேவை.
 • 20:15 (IST)Mar 08, 2019

  ஓவர் 35:

  35 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்துள்ளது. கோலி அபாரமாக ஆடி சதமடித்தார்.  இந்தியா வெற்றி பெற 90 பந்தில் 123 ரன்கள் தேவை. ஒருநாள் போட்டிகளில் இது கோலியின் 41வது சதமாகும்.
 • 20:00 (IST)Mar 08, 2019

  ஓவர் 32:

  32 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்துள்ளது. கோலி அரைசதத்தை கடந்து 95 ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகிறார். கேதர் ஜாதவ் ஸ்ம்பா பந்தில் எல்பிடபள்யூ ஆனார். இந்தியா வெற்றி பெற 108 பந்தில் 139 ரன்கள் தேவை.
 • 19:50 (IST)Mar 08, 2019

  ஓவர் 30:

  30 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்துள்ளது. கோலி அரைசதத்தை கடந்து 81 ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகிறார். இந்தியா வெற்றி பெற 120 பந்தில் 154 ரன்கள் தேவை.
 • 19:36 (IST)Mar 08, 2019

  ஓவர் 26:

  26 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை எடுத்துள்ளது. கோலி அரைசதத்தை கடந்து 72 ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகிறார். இந்தியா வெற்றி பெற 144 பந்தில் 177 ரன்கள் தேவை.
 • 19:25 (IST)Mar 08, 2019

  ஓவர் 23:

  23 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்துள்ளது. கோலி நிதானமாக ஆடி அரைசதமடித்தார். இந்தியா வெற்றி பெற 162 பந்தில் 207 ரன்கள் தேவை.
 • 19:12 (IST)Mar 08, 2019

  ஓவர் 19.1:

  19.1 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை எடுத்துள்ளது. தோனி 26 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்ம்பா பந்தில் க்ளீன் போல்டானார்.
 • 19:01 (IST)Mar 08, 2019

  ஓவர் 17:

  17 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களை எடுத்துள்ளது. கோலி 33 ரன்களுடனும், தோனி 17 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்தியா வெற்றிபெற இன்னும் 33 ஓவரில் 243 ரன்கள் தேவை.
 • 18:51 (IST)Mar 08, 2019

  ஓவர் 15:

  15 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களை எடுத்துள்ளது. கோலி 25 ரன்களுடனும், தோனி 14 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்தியா வெற்றிபெற இன்னும் 35 ஓவரில் 257 ரன்கள் தேவை.
 • 18:47 (IST)Mar 08, 2019

  ஓவர் 13:

  13 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை எடுத்துள்ளது. கோலி 21 ரன்களுடனும், தோனி 11 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்தியா வெற்றிபெற இன்னும் 37 ஓவரில் 264 ரன்கள் தேவை.
 • 18:31 (IST)Mar 08, 2019

  ஓவர் 10:

  10 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்பியது. தற்போது கோலி 13 ரன்களுடனும், தோனி 9 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்தியா வெற்றிபெற இன்னும் 40 ஓவரில் 274 ரன்கள் தேவை.
 • 18:17 (IST)Mar 08, 2019

  ஓவர் 6.2:

  6.2வது ஓவரில் ராயுடு 2 ரன் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
 • 18:08 (IST)Mar 08, 2019

  ஓவர் 4.3:

  4.3வது ஓவரில் ரோஹித் கம்மின்ஸ் பந்தில் எல்பிடபள்யூ ஆகி வெளியேறினார். சேசிங்கில் இந்தியா துவக்க வீரர்களை இழந்து தடுமாறி வருகிறது.
 • 18:07 (IST)Mar 08, 2019

  ஓவர் 3.3:

  3.3வது ஓவரில் தவான் ரிச்சர்ட்ஸன் பந்தில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
 • 17:52 (IST)Mar 08, 2019

  ஓவர் 1:

  தவான், ரோஹித் துவக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்துள்ளது இந்தியா.
 • 17:07 (IST)Mar 08, 2019

  ஓவர் 50:

  50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோனின்ஸ் 31 ரன்களுடனும், கேரே 21 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 • 16:57 (IST)Mar 08, 2019

  ஓவர் 48:

  48 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோனின்ஸ் 18 ரன்களுடனும், கேரே 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 • 16:48 (IST)Mar 08, 2019

  ஓவர் 46:

  46 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோனின்ஸ் 12 ரன்களுடனும், கேரே 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 • 16:43 (IST)Mar 08, 2019

  ஓவர் 45:

  45 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோனின்ஸ் 10 ரன்களுடனும், கேரே 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 • 16:38 (IST)Mar 08, 2019

  ஓவர் 43.4:

  43.4 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்கோம்ப் ரன் ஏதும் எடுக்காமல் குல்தீப் பந்தில் எல்பிடபள்யூ முறையில் டக் அவுட் ஆனார்.
 • 16:34 (IST)Mar 08, 2019

  ஓவர் 43.2:

  43.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மார்ஷ் 7 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்தில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
 • 16:32 (IST)Mar 08, 2019

  ஓவர் 42:

  42 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 31 பந்தில் 47 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார்.
 • 16:19 (IST)Mar 08, 2019

  ஓவர் 40:

  40 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 24 பந்தில் 37 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். அவரோடு ஷான் மார்ஷ் ஆடி வருகிறார்.
 • 16:14 (IST)Mar 08, 2019

  ஓவர் 38.3:

  38.3 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக ஆடி சதமடித்த கவாஜா 104 ரன்னில் ஷமி பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
 • 16:04 (IST)Mar 08, 2019

  ஓவர் 37:

  37 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா அபாரமாக ஆடி 107 பந்தில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் சதமடித்து அசத்தினார். இது அவரது முதல் ஒருநாள் போட்டி சதமாகும். மேக்ஸ்வெல் ஜடேஜா வீசிய இந்த ஓவரில் முதல் மூன்று பந்துகளை 6,4,4 என சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விளாசினார்.
 • 15:56 (IST)Mar 08, 2019

  ஓவர் 35:

  35 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 96 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 11 ரன்களுடனும் ஆடிவருகிறார்கள்.
 • 15:46 (IST)Mar 08, 2019

  ஓவர் 31.5:

  31.5 ஓவரின் முடிவில் பின்ச் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபள்யூ முறையில் அவுட் ஆனார். கவாஜா 93 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.
 • 15:27 (IST)Mar 08, 2019

  ஓவர் 29:

  29 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 179 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 86 ரன்களுடனும், பின்ச் 86 ரன்களுடனும் ஆடிவருகிறார்கள்.
 • 15:16 (IST)Mar 08, 2019

  ஓவர் 25:

  25 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 73 ரன்களுடனும், பின்ச் 76 ரன்களுடனும் ஆடிவருகிறார்கள்.
 • 15:11 (IST)Mar 08, 2019

  ஓவர் 23:

  23 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 58 ரன்களுடனும், பின்ச் 74 ரன்களுடனும் ஆடிவருகிறார்கள்.
 • 14:56 (IST)Mar 08, 2019

  ஓவர் 20 :

  20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 65 ரன்களுடனும், பின்ச் 52 ரன்களுடனும் ஆடிவருகிறார்கள். துவக்க வீரர்கள் இருவரும் அரைசதமடித்து அணியை வலுவான நிலையில் வைத்துள்ளனர்.
 • 14:41 (IST)Mar 08, 2019

  ஓவர் 17:

  17 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 111 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 47 ரன்களுடனும், பின்ச் 57 ரன்களுடனும் ஆடிவருகிறார்கள்.

  கேதர் ஜாதவ் வீசிய இந்த ஓவரில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் அரைசதமடித்தார் பின்ச்
 • 14:37 (IST)Mar 08, 2019

  ஓவர் 16 :

  16 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 45 ரன்களுடனும், பின்ச் 41 ரன்களுடனும் ஆடிவருகிறார்கள்.
 • 14:23 (IST)Mar 08, 2019

  ஓவர் 13 :

  13 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 41 ரன்களுடனும், பின்ச் 29 ரன்களுடனும் ஆடிவருகிறார்கள்.
  Comments
  ஹைலைட்ஸ்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைப்பெறுகிறது
  • இந்த போட்டியை இந்தியா வென்றால், தொடரை கைப்பற்றும்
  • நான்காவது போட்டி, மொகாலியில் மார்ச் 10 நடைப்பெறும்
  தொடர்புடைய கட்டுரைகள்
  3வது ஒருநாள் போட்டி: கோலி சதம் வீண்... இந்தியா போராடி தோல்வி #Highlights
  3வது ஒருநாள் போட்டி: கோலி சதம் வீண்... இந்தியா போராடி தோல்வி #Highlights
  ஐசிசியின் வளர்ந்துவரும் சர்வதேச வீரர் ரிஷப் பன்ட்! #ICCAwards
  ஐசிசியின் வளர்ந்துவரும் சர்வதேச வீரர் ரிஷப் பன்ட்! #ICCAwards
  தோனி ரசிகர்களை உற்சாகமாக்கிய ஐசிசியின் மாஸான கவர் ஃபோட்டோ!
  தோனி ரசிகர்களை உற்சாகமாக்கிய ஐசிசியின் மாஸான கவர் ஃபோட்டோ!
  தோனி பற்றி ட்விட்: சர்ச்சைக்குள்ளான ரெஸ்ட்லிங் மேனேஜர்
  தோனி பற்றி ட்விட்: சர்ச்சைக்குள்ளான ரெஸ்ட்லிங் மேனேஜர்
  இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு அனுஷ்காவின் ஸ்பெஷல் வாழ்த்து!
  இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு அனுஷ்காவின் ஸ்பெஷல் வாழ்த்து!
  Advertisement