கோலி சதம்... தோனி அரைசதம்... அடிலெய்டில் இந்தியா அபார வெற்றி #Highlights

Updated: 15 January 2019 16:54 IST

டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது

India vs Australia 2nd ODI #Highlights : India Look To Bounce Back After Opening Defeat
இந்திய அணியை பொறுத்த வரையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலீல் அகமதுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். © AFP

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் துவங்கியது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய அதே ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியிலும் களமிறங்கியுள்ளது.

இந்திய அணியை பொறுத்த வரையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலீல் அகமதுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இது அவருக்கு அறிமுக போட்டியாகும். முதல் போட்டியில் இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதால், இன்றைய போட்டியை வெல்லும் முனைப்பில் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸில் வென்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் பின்ச் மற்றும் கேரி துவக்க வீரர்களாக களமிறங்கினர் 7 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளனர். இதுவரை ஒரு பவுண்டரி மட்டுமே அடித்துள்ளனர். மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஓவர் 7: பின்ச் அவுட்

ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் ரன் குவிக்க ஆரம்பம் முதலே தடுமாறி வந்தார். 7வது ஓவரின் கடைசி பந்தில் பின்ச் 6 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர்குமார் பந்தில் போல்டாகி வெளியேறினார். இவர் 19 பந்தில் 6 ரன்கள் அடுத்தார்.

ஓவர் 8: கேரி அவுட்

பின்ச் அவுட் ஆனதை தொடர்ந்து கவாஜா களமிறங்கினார். ஆனால் 8வது ஓவரின் நான்காவது பந்தில் மற்றோரு துவக்க வீரரான கேரி 27 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் குவித்து முகமது ஷமி பந்தில் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி கடைசி 5 பந்தில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஓவர் 10:

முதலாவது பவர் ப்ளேயின் முடியில் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. நிதானமாக ஆடி வந்த ஆஸ்திரேலியா துவக்க வீரர்கள் இருவரையும் இழந்தது. முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா வெறும் 3 பவுண்டரிகளை மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஓவர் 15:

15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் கவாஜாவும், மார்ஷும் நிதானமாக ஆடி வருகிறார்கள். கவாஜா 15 ரன்களுடனும், மார்ஷ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 25:

ஆஸ்திரேலியா 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடி வந்த ஷான் மார்ஷ் அரைசதமடித்தார். இந்த தொடரில் இது  அவரது இரண்டாவது அரைசதமாகும். மார்ஷ் 54 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 20:

18.3 ஓவரில் கவாஜா ஒரு ரன் எடுக்க முயன்ற போது ஜடேஜாவின் நேரடி த்ரோவால் அபாரமாக ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். கவாஜா 23 பந்தில் 21 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜடேஜாவின் த்ரோ துல்லியமாக இருந்தது. ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் குவித்துள்ளது.

ஓவர் 25:

ஆஸ்திரேலியா 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடி வந்த ஷான் மார்ஷ் அரைசதமடித்தார். இந்த தொடரில் இது  அவரது இரண்டாவது அரைசதமாகும். மார்ஷ் 54 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 28:

ஆஸ்திரேலியாவின் 27.2வது ஓவரில்  ஜடேஜா பந்தில் ஹேண்ட்ஸ் கோம்ப்பை 20 ரன்னில் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார் தோனி. 28 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்துள்ளது.

ஓவர் 35:

ஆஸ்திரேலியா 35 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது. ஷான் மார்ஷ் 86 ரன்களுடனும், ஸ்டோனின்ஸ் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 38:

ஆஸ்திரேலியாவின் 36.4 ஓவரில் ஷமி வீசிய பந்தில், தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஸ்டோனின்ஸ். அவர் 36 பந்தில் 29 ரன்கள் குவித்திருந்தார்.  ஆஸ்திரேலியா 38 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 41:

ஆஸ்திரேலியா 41 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். 109 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 100 ரன் குவித்தார். இது அவரது 7வது சர்வதேச சதமாகும்.

ஓவர் 45:

ஆஸ்திரேலியா 45 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். மார்ஷ் 121 ரன்களுடனும்,  மேக்ஸ்வெல் 26 பந்தில் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

ஓவர் 48:

48வது ஓவரின் மூன்றாவது பந்தில் அதிரடியாக ஆடிய மேக்ஸ் வெல் 37  பந்தில் 48 ரன்கள் குவித்து புவனேஷ்வர் குமார் பந்தில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேர்ஷ் , மேக்ஸ்வெல் இணை 10 ஓவரில் 94 ரன்கள் குவித்தது. 5வது பந்தில் சதமடித்து சிறப்பாக ஆடி வந்த மார்ஷ் 123 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 48 ஓவர் முடிவில் 7  விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர்50:

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஷான் மார்ஷ் 123 பந்தில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 37 பந்தில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

கடைசி 5 ஓவர்களை இந்திய பந்துவிச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். 11 பந்தில் 4 விக்கெட்டுகளை இழந்தது. மேக்ஸ்வெல், மார்ஷ், ரிச்சர்ட்ஸன், சிடில் என விக்கெட்டுகளை வரிசையாக இழந்தனர். 

இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 10 ஓவர்கள் வீசி 45 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். லயன் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் குவித்தார்.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு 299 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணி தனது இன்னிங்ஸை ஆடத்துவங்கியது.

ஓவர் 5:

299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கியது இந்தியா. ரோஹித் ஷர்மா மற்றும் தவான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்தியா முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் குவித்துள்ளது. தவான் 15 ரன்களுடனும், ரோஹித் 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 273 ரன்கள் தேவை.

ஓவர் 8:

சிறப்பாக ஆடி வந்த தவான், 28 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன் குவித்து பெகன்ட்ராஃப் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 8 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் 11 ரன்களுடனும், கோலி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 10:

இந்தியா 10 ஓவர் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் 15 ரன்களுடனும், கோலி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு 40 ஓவரில் 246 ரன்கள் தேவை.

ஓவர் 20:

இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் குவித்துள்ளது. கோலி 24 ரன்களுடனும் , ராயுடு 7 ரன்களுடனும்  களத்தில் உள்ளனர். சிறப்பாக ஆடிய ரோஹித் ஷர்மா 43 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோனின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியாவின் வெற்றிக்கு 30 ஓவரில் 191 ரன்கள் தேவை.

ஓவர் 25:

இந்தியா 25 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்துள்ளது. கோலி 35 ரன்களுடனும் , ராயுடு 14 ரன்களுடனும்  களத்தில் உள்ளனர். ஆட்டத்தின் பாதி ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 25 ஓவரில் 167 ரன்கள் தேவை.

ஓவர் 30:

இந்தியா 30 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்துள்ளது. கோலி 48 ரன்களுடனும் , ராயுடு 24 ரன்களுடனும்  களத்தில் உள்ளனர்.  இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 20 ஓவரில் 144 ரன்கள் தேவை.

ஓவர் 31:

கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடி வந்த அம்பதி ராயுடு, 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். கோலி மறுமுனையில் 66 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். இந்தியா 31 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்துள்ளது. கோலி 54 ரன்களோடு களத்தில் உள்ளார்.  இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 19 ஓவரில் 138 ரன்கள் தேவை.

ஓவர் 43:

அபாரமாக ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். இது அவரது 39வது ஒருநாள் சதமாகும். இந்தியா 42 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்துள்ளது. கோலி 100 ரன்களோடு களத்தில் உள்ளார்.  இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 48 பந்தில் 71 ரன்கள் தேவை.

ஓவர் 44:

அபாரமாக ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி, 39வது சதமடித்த நிலையில் அவுட் ஆனார். இந்தியா 44 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்துள்ளது.இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 36 பந்தில் 55 ரன்கள் தேவை.

ஓவர் 46:

இந்தியா 46 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்துள்ளது. இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 24 பந்தில் 34 ரன்கள் தேவை. தோனி 39 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஓவர் 47:

இந்தியா 47 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்துள்ளது. இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 18 பந்தில் 25 ரன்கள் தேவை. தோனி 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஓவர் 48:

இந்தியா 48 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்துள்ளது. இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 12 பந்தில் 16 ரன்கள் தேவை. தோனி 45 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஓவர் 49:

இந்தியா 49 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்துள்ளது. இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 6 பந்தில் 7 ரன்கள் தேவை. தோனி 48 ரன்களுடனும், கார்த்திக் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.

டாஸில் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 298 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி 131 ரன்கள் குவித்தார். பின்னர் 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா 49.2 ஓவரில்  299 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் கேப்டன் கோலி சதமடித்தார். கோலி அரைசதமடித்து 55 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அடிலெட்ய்டு ஒருநாள் போட்டியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டி மெல்பெர்னில் வரும் வெள்ளியன்று நடக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"வரலாற்று வெற்றி உலகக் கோப்பைக்கு நம்பிக்கை அளிக்கிறது" : கேப்டன் கோலி
"வரலாற்று வெற்றி உலகக் கோப்பைக்கு நம்பிக்கை அளிக்கிறது" : கேப்டன் கோலி
''பிட்சில் கால் வைக்காதே'' - கலீலிடம் கோபப்பட்ட தோனி!
‘அணியில் எனக்கு என்னப் பணி..?’- மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
‘அணியில் எனக்கு என்னப் பணி..?’- மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
‘அது ஒரு தோனி கிளாசிக்!’- வெற்றி குறித்து நெகிழும் கோலி
‘அது ஒரு தோனி கிளாசிக்!’- வெற்றி குறித்து நெகிழும் கோலி
சர் ஜடேஜாவின் மற்றொரு வாவ் ஃபீல்டிங்..! #ViralVideo
சர் ஜடேஜாவின் மற்றொரு வாவ் ஃபீல்டிங்..! #ViralVideo
Advertisement