முதல் ஒருநாள் போட்டி: தோனி, ஜாதவ் அபாரம்... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! #Highlights

Updated: 02 March 2019 21:54 IST

இந்த போட்டியில் டாஸில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இது ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச்சின் 100வது போட்டியாகும்

India vs Australia 1st ODI highlights and match updates; India won Australia In Hyderabad

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா ஆடும் கடைசி ஒருநாள் தொடர் இது. தற்போது இந்தியா ஆடவுள்ள இந்த ஒருநாள் தொடர் உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த போட்டியில் டாஸில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இது ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச்சின் 100வது போட்டியாகும்.

இந்தியா: 

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, எம்.எஸ்.தோனி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா

ஆஸ்திரேலியா:

ஆரோன் பின்ச்(கேப்டன்), மார்கஸ் ஸ்டோனின்ஸ், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரே, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸம்பா, ஜேஸன் பெகன்ட்ராஃப், பாட் கம்மின்ஸ், நாதன் கோல்டர் நைல்

ஹைதராபாத்தில் துவங்கும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்ச் மற்றும் கவாஜா துவக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

ஓவர் 1:

முகமது ஷமி வீசிய ஓவரை எதிர்கொண்ட கவாஜா ஆறு பந்துகளிலும் ரன் குவிக்காமல் ஷமியின் முதல் ஓவரை மெய்டனாக்கினார்.

ஓவர் 2:

பும்ரா வீசிய ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் ரன் ஏதும் எடுக்காமல் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு பின் ஸ்டோனின்ஸ் ஆடவந்துள்ளார். ஆஸ்திரேலியா 2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 3 ரன்களை எடுத்துள்ளது.

ஓவர் 5:

ஆஸ்திரேலியா 5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை எடுத்துள்ளது. பின்ச் டக் அவுட் ஆகி வெளியேறியதால், நிதானமாக ஆடி வருகிறது ஆஸ்திரேலியா. ஷமி வீசிய 3 ஓவர்களில் 2 ஓவர்களை மெய்டனாக வீசியுள்ளார்.

ஓவர் 10:

ஆஸ்திரேலியா 10 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்களை எடுத்துள்ளது. நிதானமாக ஆடி வருகிறது ஆஸ்திரேலியா. கவாஜா 23 ரன்களுடனும், ஸ்டோனின்ஸ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 15:

ஆஸ்திரேலியா 15 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்களை எடுத்துள்ளது. கவாஜா 39 ரன்களுடனும், ஸ்டோனின்ஸ் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். விக்கெட்டுகளை இழக்காமல் இருவரும் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகின்றனர்.

ஓவர் 20:

ஆஸ்திரேலியா 20.1 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை எடுத்துள்ளது. கவாஜா 46 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஸ்டோனின்ஸ் 37  ரன்கள் எடுத்து ஜாதவ் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஹேண்ட்ஸ்கோம்ப் களமிறங்கியுள்ளார்.

ஓவர் 24:

ஆஸ்திரேலியா 24 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களை எடுத்துள்ளது. கவாஜா 50 ரன்கள் எடுத்து குல்தீப் பந்தில் பவுண்டரி லைனில் விஜய் சங்கரால் அபாரமாக கேட்ச் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

ஓவர் 30:

ஆஸ்திரேலியா 30 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் 18 பந்தில் 23 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஹேண்ட்ஸ்கோம்ப், 19 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்தில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார்.

ஓவர் 35:

ஆஸ்திரேலியா 35 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. மேக்ஸ்வெல்  34 ரன்களுடன் களத்தில் உள்ளார். அறிமுக வீரர் ஆஷ்டன் டர்னர் 11 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.

ஓவர் 38:

ஆஸ்திரேலியா 38 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் 38 ரன்களுடன் களத்தில் உள்ளார். அறிமுக வீரர் ஆஷ்டன் டர்னர் 21 ரன்கள் எடுத்த நிலையில், ஷமி பந்தில் போல்டானார்.

ஓவர் 40:

ஆஸ்திரேலியா 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் 40 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் போல்டானார். கோல்டர் நைல் , கேரே இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

ஓவர் 45:

ஆஸ்திரேலியா 45 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை எடுத்துள்ளது. கோல்டர் நைல் 13 ரன்களுடனும் , கேரே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடி காட்டினால் மட்டுமே ஆஸ்திரேலியா ஓரளவுக்கு சிறப்பான ஸ்கோரை எட்ட முடியும். இந்திய தரப்பில் ஷமி, குல்தீப் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பும்ரா, ஜாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

ஓவர் 50:

ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை எடுத்துள்ளது. கேரே 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கவாஜா 50, மேக்ஸ்வெல் 40, ஸ்டோனின்ஸ் 37 என ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 236 ரன்களை குவித்தது. இந்திய தரப்பில் ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஓவர் 2:

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா. இரண்டாவது ஓவரிலேயே துவக்க வீரர் தவான் டக் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா களத்தில் உள்ளனர். இந்தியா 2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 5:

இந்தியா 5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 13 ரன்களுடனும், கோலி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 12:

இந்தியா 12 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 25 ரன்களுடனும், கோலி 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஓவர் 15:

இந்தியா 15 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 31 ரன்களுடனும், கோலி 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 35 ஓவரில் 172 ரன்கள் தேவை.

ஓவர் 17:

இந்தியா 17 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 44 ரன்கள் குவித்து ஸம்பா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்தியா வெற்றி பெற இன்னும் 33 ஓவரில் 156 ரன்கள் தேவை. ரோஹித் 35 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஓவர் 20:

இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 37 ரன்களுடனும், ராயுடு 12 ரன்களுடனும் களத்தில் உள்ளார். இந்தியா வெற்றி பெற இன்னும் 30 ஓவரில் 142 ரன்கள் தேவை.

ஓவர் 21:

 இந்தியா 21 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 37 ரன்கள் எடுத்த நிலையில் கோலிடர் நைல் பந்தில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராயுடு 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஓவர் 24:

 இந்தியா 24 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. ராயுடு 13 ரன்னில் ஸம்பா பந்தில் ஹேண்ட்ஸ்கோம்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா வெற்றி பெற இன்னும் 159 பந்தில் 138 ரன்கள் தேவை.

ஓவர் 30:

இந்தியா 30 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.தோனி 11 ரன்களுடனும், ஜாதவ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 120 பந்தில் 112 ரன்கள் தேவை.

ஓவர் 35:

இந்தியா 35 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 22 ரன்களுடனும், ஜாதவ் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 90 பந்தில் 90 ரன்கள் தேவை.

ஓவர் 40:

இந்தியா 40 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.தோனி 38 ரன்களுடனும், ஜாதவ் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 60 பந்தில் 61 ரன்கள் தேவை.

ஓவர் 45:

இந்தியா 45 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது.தோனி 47 ரன்களுடனும், ஜாதவ் 63 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 30 பந்தில் 28 ரன்கள் தேவை. தோனி ஜாதவ் இணை கூட்டாக 110 ரன்கள் சேர்த்துள்ளது.

ஓவர் 48:

இந்தியா 48 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது.தோனி 51 ரன்களுடனும், ஜாதவ் 81 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 12 பந்தில் 5 ரன்கள் தேவை. தோனி ஜாதவ் இணை கூட்டாக 133 ரன்கள் சேர்த்துள்ளது.

ஓவர் 48.2:

இந்தியா 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தோனி 59 ரன்களுடனும், ஜாதவ் 81 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கவாஜா 50, மேக்ஸ்வெல் 40, ஸ்டோனின்ஸ் 37 என ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 236 ரன்களை குவித்தது. இந்திய தரப்பில் ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா ரன் ஏதும் எடுக்காமலேயே தவானை இழந்தது. பின்னர் பொறுப்புடன் ஆடிய கோலி 44 ரன்களையும், ரோஹித் 35 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன் பின் ஜோடி சேர்ந்த தோனி ஜாதவ் இணை கூட்டாக 141 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. தோனி 59 ரன்களுடனும், ஜாதவ் 81 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் கோல்டர்நைல் , ஸம்பா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் ஒருநாள் போட்டி: தோனி, ஜாதவ் அபாரம்... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! #Highlights
முதல் ஒருநாள் போட்டி: தோனி, ஜாதவ் அபாரம்... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! #Highlights
உலகக் கோப்பைக்கு முன்னோட்டம்: டி20 தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?
உலகக் கோப்பைக்கு முன்னோட்டம்: டி20 தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?
Advertisement