மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்... இந்திய அணி ஜூலை 21ம் தேதி தேர்வு!

Updated: 20 July 2019 13:42 IST

எம்.எஸ்.கே பிரசாத் தலைமை தாங்கும் இந்திய அணியின் தேர்வு கமிட்டி வரும் 21ம் தேதி மும்பையில் கூடுகிறது. இதில், மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டிக்கு அணி தேர்வு நடப்பெறவுள்ளது.

Selection Committee To Meet On July 21 To Pick India
இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. © AFP

எம்.எஸ்.கே பிரசாத் தலைமை தாங்கும் இந்திய அணியின் தேர்வு கமிட்டி வரும் 21ம் தேதி மும்பையில் கூடுகிறது. இதில், மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டிக்கு அணி தேர்வு நடப்பெறவுள்ளது. ஒரு மாத சுற்றுப்பயணத்தில், 3 டி20 போட்டிகளில் இரண்டு போட்டிகள் ஃப்லோரிடாவுலும், ஒன்று குயானாவிலும் நடக்கவுள்ளது. இத்துடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. "அனைத்து இந்திய சீனியர் தேர்வு கமிட்டி மும்பையில், 21ம் தேதி சந்தித்திக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணியை தேர்வு செய்யவுள்ளோம். இந்த சுற்றுப்பயணம் ஆஸ்கட் 3ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடக்கிறது" பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று நடக்கவிருந்த சந்திப்பு ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. "இதில் சட்ட ரீதியான விஷயங்கள் சில செய்யப்படவுள்ளன. புது விதி மாற்றங்களால், இந்த கால அவகாசம் தேவைப்படுகிறது. பிசிசிஐ சந்திப்புக்கு அணியின் கேப்டன் இருக்க வேண்டியுள்ளது. அணி வீரர்களின் உடன் தகுதி சான்றிதழ்கள் சனிக்கிழமை மாலை கிடைத்துவிடும்" பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார்.

38 வயதான தோனி, இனி அணியில் தொடர்வாரா என்ற விவாதங்களும், கேள்விகளுமே அதிகம் இருக்கிறது. முன்னாள் கேப்டன் தோனி இதுவரை ஓய்வு குறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணியில் தோனி இருப்பாரா, இருக்க மாட்டாரா என்பது வைத்து தான் அவரின் எதிர்கால திட்டம் என்னவென்பது தெரியவரும். ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கவுள்ள சுற்றுப்பயணத்தில், 3 டி20 போட்டிகளில், பல ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன.

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில நடக்கவுள்ள உலகக் கோப்பை டி20 தொடரை மனதில் வைத்து தோனிக்கு பதிலாக ரிஷப் பன்ட்டை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் தோனி இடம்பெறவில்லை. அதனால், இந்த முறையும் அவர் அணியில் இடம்பெற மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பையில் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால், அவருக்கு மாற்று வீரராக பன்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய தேர்வு குழு ஜூலை 21ம் தேதி கூடுகிறது
  • மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப்பயணத்துக்கு அணி தேர்வு செய்யப்படவுள்ளது
  • இந்தச் சுற்றுப்பயணத்தில், 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட்கள் நடக்கவுள்ளன
தொடர்புடைய கட்டுரைகள்
ரவி சாஸ்திரி பதிவிட்ட புகைப்படம்... மீம்ஸ்களால் நிறைந்த ட்விட்டர்!
ரவி சாஸ்திரி பதிவிட்ட புகைப்படம்... மீம்ஸ்களால் நிறைந்த ட்விட்டர்!
"இது அவருடைய கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" - பும்ரா குறித்து இர்பான் பதான்!
"இது அவருடைய கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" - பும்ரா குறித்து இர்பான் பதான்!
7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் பெற்ற விராட் கோலி!
7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் பெற்ற விராட் கோலி!
தோனியின் சாதனையை முறியடித்த கோலி... டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்!
தோனியின் சாதனையை முறியடித்த கோலி... டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
Advertisement