
2019 உலகக் கோப்பை அணியில் ராயுடுவின் நீக்கம் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தது. அதற்கு ராயுடுவிடமிருந்து ஒரு நக்கலான ட்விட்டும் பதிவானது. அந்த ட்விட்டில் உள்ள மர்மத்தை நீக்கும் வகையில் இந்திய வீரர் ப்ரக்யான் ஓஜா பதிலளித்துள்ளார். இதில் "ராயுடுவின் ட்விட் ஹைதராபாத் வீரர்களின் நிலையை எடுத்துரைக்கிறது" என்றார்.
ராயுடு தனது ட்விட்டில் "நான் உலகக் கோப்பையை பார்க்க புதிய 3டி க்ளாஸை ஆர்டர் செய்திருக்கிறேன்" என்று ட்விட் செய்திருந்தார்.
3டி க்ளாஸ் என்று அவர் குறிப்பிட்டது. தேர்வுக்குழு தலைவர் விஜய் சங்கரை 3 டைமன்ஷனல் கிரிக்கெட்டர் என்று கூறியது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை ப்ரக்யான் ஓஜா ஹைதரபாத் வீரர்களுக்கு பிசிசிஐ பாரபட்சம் பார்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Just Ordered a new set of 3d glasses to watch the world cup.
— Ambati Rayudu (@RayuduAmbati) April 16, 2019
Curious case of some Hyderabadi cricketers... been in a similar situation... understand the winkhttps://t.co/zLtAQIMvYn
— Pragyan Prayas Ojha (@pragyanojha) April 16, 2019
ராயுடு ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு அரைசதம் மட்டும் அடித்துள்ளார். நான்கு போட்டிகளில் ஒற்றை இலக்கத்திலும், ஒரு போட்டியில் டக் அவுட் ஆகியுள்ளார்.
55 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1694 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதங்களும், 10 அரைசதங்களும் அடங்கும்.
உலகக் கோப்பை அணிக்காக ராயுடுவும், பன்ட்டும் மாற்று வீரர்களாக இருப்பார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.