2019 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் - ராகுல் டிராவிட்

Updated: 02 February 2019 12:30 IST

இந்தியா, 2019 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

India
இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , நியூசிலாந்து அணிகளை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.  © Twitter

இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தற்போது உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை 2019 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணித்துள்ளார். இங்கிலாந்தில் வரும் மே 30ம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பையில், இந்தியா பிரதான அணியாக இருக்கும் என்றார்.

"இந்தியா, சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த சாதனையை தன் வசம் வைத்துள்ளது. அனைத்து வீரர்களுமே ஃபார்மில் உள்ளனர்" என்றார்.

இதே உத்வேகம் உலகக் கோப்பையிலும் தொடரும் என்று நம்புவதாக கூறினார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , நியூசிலாந்து அணிகளை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. 

மேலும் உலகக் கோப்பையில் பலமான அணிகளாக கருதப்படும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை வீழ்த்தியிருப்பது அணிக்கு மேலும் தன்னம்பிக்கை அளிக்கும் என்றார்.

கடந்த முறை இங்கிலாந்தில் 1999வது வருடம் உலகக் கோப்பை நடைபெற்றது. அதில் அதிகபட்ச ரன் குவித்தவர் ராகுல் டிராவிட் தான்.

இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருக்கும் ட்ராவிட், முன்பு போல் இங்கிலாந்து பிட்ச்கள் இப்போது இல்லை. தற்போது பேட்டிங்கிற்கு சாதமாக உள்ளது. இந்தியா ஏ அணி இங்கிலாந்தில் பயணம் செய்த போதே 300 ரன்களை அசாதாரணமாக குவித்தனர் என்றார்.

இப்போது விதிமுறைகள், பவர் ப்ளே, பிட்ச் எல்லாமே 1999க்கும் இப்போதைக்கும் நிறைய மாறியிருக்கிறது. அதனால் இரண்டையும் ஒப்பிட முடியாது என்றார். 

Comments
ஹைலைட்ஸ்
  • 1999வது ஆண்டு உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்தவர் ராகுல் டிராவிட்
  • இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் ட்ராவிட்
  • மே 30ம் தேதி உலகக் கோப்பை இங்கிலாந்தில் துவங்கவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
Advertisement