"இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்லாததற்கு இந்தியா காரணமில்லை" - விளையாட்டுத்துறை அமைச்சர்!

Updated: 11 September 2019 18:35 IST

பாகிஸ்தானுக்கு சென்று ஆடவிருந்த இலகங்கை வீரர்களை இந்தியா தான் தடுத்தது என்று பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் உசேன் சவுத்ரி கூறிய கருத்துக்களை இலங்கை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மறுத்துள்ளார்.

India Not Behind Our Players
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து 10 வீரர்கள் விலகியுள்ளனர். © AFP

பாகிஸ்தானுக்கு சென்று ஆடவிருந்த இலகங்கை வீரர்களை இந்தியா தான் தடுத்தது என்று பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் உசேன் சவுத்ரி கூறிய கருத்துக்களை இலங்கை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மறுத்துள்ளார். இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் பெர்னாண்டோ , இந்தச் சுற்றுப்பயணத்திலிருந்து 10 வீரர்கள் விலகியுள்ளனர் என்றார். காரணம், 2009 ஆண்டு வீரர்கள் வந்த பேருந்தை தீவிரவாதிகள் தாக்கியதில், 8 பேர் உயிரிழந்து, பலரும் காயமடைந்துள்ளனர். 

"பாகிஸ்தானில் விளையாடக்கூடாது என்று இலங்கை வீரர்களை இந்தியா தடுக்கிறது என்ற செய்திகளில் உண்மை இல்லை. 2009 நடந்த சம்பவத்தால் சிலர் இதில் விளையாட வேண்டாம் என்று முடிவெடுத்தனர். அவர்களின் முடிவை மதித்து, விருப்பமுள்ள வீரர்களை தேர்வு செய்தோம். முழு வலிமை உள்ள அணி எங்களிடம் உள்ளது. பாகிஸ்தானை பாகிஸ்தானில் வீழ்த்துவோம்," என்று அவர் ட்விட் செய்தார்.

அந்தச் சம்பவத்துக்கு பிறகு இலங்கை அணி இதுவரை பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றதில்லை.

இலங்கையின் சிறந்த வீரர்கள், டி20 கேப்டன் லசித் மலிங்கா, மற்றும் முன்னாள் கேப்டன்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் தவிர தினேஷ் சந்திமல், சுரங்கா லக்மல், திமுத் கருணாரத்ன, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் செப்டம்பர் 27 தொடங்கவிருக்கும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளனர்.

இதன் பின்னர், பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருக்கும் சவுத்ரி, இலங்கையைச் சேர்ந்த வீரர்களை பாகிஸ்தானுக்குச் சென்றால், அவர்கள் ஐபிஎல் ஒப்பந்தங்களை இழக்க நேரிடும் என்று இந்தியா அச்சுறுத்தியது என்றார்.

இலங்கை அணி பாகிஸ்தானுடன் மூன்று ஒருநாள் போட்டிகளை செப்டம்பர் 27,29 மற்றும் அக்டோபர் 3 ஆகிய தேதிகளிலும், டி20 போட்டிகளை லாகூரில் அக்டோபர் 5,7 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இலங்கையுடனான தொடருக்கு இடமாற்றத்தை மறுத்துள்ளது பாகிஸ்தான்!
இலங்கையுடனான தொடருக்கு இடமாற்றத்தை மறுத்துள்ளது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கும் இலங்கை வீரர்கள்... வருத்தத்தில் அக்தர்!
"வீரர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்" - இலங்கை கிரிக்கெட் வாரியம்!
"வீரர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்" - இலங்கை கிரிக்கெட் வாரியம்!
"இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்லாததற்கு இந்தியா காரணமில்லை" - விளையாட்டுத்துறை அமைச்சர்!
"இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்லாததற்கு இந்தியா காரணமில்லை" - விளையாட்டுத்துறை அமைச்சர்!
4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த மலிங்கா!
4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த மலிங்கா!
Advertisement