மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து பாதியில் திரும்ப அழைக்கப்பட்ட அணி மேலாளர்!

Updated: 14 August 2019 20:13 IST

மேற்கிந்திய தீவுகளில் வரம்பு மீறி நடந்து கொண்டதாக இந்திய அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியம் பாதி தொடரிலிருந்து நாட்டிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

India Manager Called Back From West Indies, Future Appointment Under Cloud: Report
சுனில் சுப்ரமணியம், மேலாளர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், இந்த மாத இறுதிக்குள் புதிய மேலாளர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. © AFP

மேற்கிந்திய தீவுகளில் வரம்பு மீறி நடந்து கொண்டதாக இந்திய அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியம் பாதி தொடரிலிருந்து நாட்டிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இதே போன்ற செயலில் 2018 பெர்த் டெஸ்ட்டின் போதும் நடந்து கொண்டார். தற்போது இந்த விஷயம் மூத்த அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டு பிசிசிஐ கவனத்துக்கு வந்துள்ளது.

மேலும், அவர் மேலாளர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், இந்த மாத இறுதிக்குள் புதிய மேலாளர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இமெயில் மூலமாக அவரிடம் தொடர்பு கொண்டு தவறு குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், மூத்த அதிகாரிகள் அவரை திரும்ப நாட்டுக்கு அழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர் நாடு திருன்பியதும் இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது. இது அவருக்கு முதல் எச்சரிக்கை அல்ல என்பதால் மேலாளர் பதவி உடனடியாக பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சுனில் சுப்ரமணியம் மேற்கிந்திய தீவுகளுக்கு விளம்பரங்களை படமாக்கவே அனுப்பப்பட்டார். ஆனால் இந்திய ஆணையத்தின் படி அவர் வரம்பு மீறி நடந்து கொண்டுள்ளார்.

முன்னதாகவே பிசிசிஐ இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க கூடாது என தெளிவாக அறிவுறுத்தியிருந்தது.

பெர்த் டெஸ்ட்டின் போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மேலாளருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டார்.

ஆஸ்திரேலிய தொடர், சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடர் அனைத்திலும் அவரது செயல்பாடுகள் மோசமாகவே இருந்தன என்று கூறப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபிஎல் திறப்பு விழாவை நடத்தப்போவதில்லை என பிசிசிஐ அறிவிப்பு: தகவல்
ஐபிஎல் திறப்பு விழாவை நடத்தப்போவதில்லை என பிசிசிஐ அறிவிப்பு: தகவல்
பெங்களூரு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துகொண்ட சவுரவ் கங்குலி!
பெங்களூரு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துகொண்ட சவுரவ் கங்குலி!
"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்
"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்
பிசிசிஐ தலைவராகும் போது கங்குலி அணிந்திருந்த பிளேஸரில் என்ன ஸ்பெஷல்?
பிசிசிஐ தலைவராகும் போது கங்குலி அணிந்திருந்த பிளேஸரில் என்ன ஸ்பெஷல்?
"இந்திய அணியை போலவே பிசிசிஐயையும் ஊழல் இல்லாமல் வழிநடத்துவேன்" - கங்குலி
"இந்திய அணியை போலவே பிசிசிஐயையும் ஊழல் இல்லாமல் வழிநடத்துவேன்" - கங்குலி
Advertisement