"இவரால் தான் இந்தியா தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையில் தோற்றது" - ராபின் சிங்

Updated: 29 July 2019 11:15 IST

இந்திய லீக் போட்டியில் ஒரு போட்டியை மட்டுமே தோற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இருப்பினும் அரையிறூதியில் தோற்றதால் வெளியேறிது.

Robin Singh Takes A Dig At Ravi Shastri, Says India Lost 2 Successive World Cups Under His Coaching
ரவி சாஸ்திரி மற்றும் மற்ற பயிற்சியாளர்கள் அனைவருக்கும் 45 நாட்கள் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. © AFP

உலகக் கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதி, அரையிறுதியில் 18 ரன்கள் வொத்தியாசத்தில் தோற்று உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. இந்த ஆட்டம் மழை காரணமாக இரண்டு நாள் தொடர்ந்தது. இந்திய லீக் போட்டியில் ஒரு போட்டியை மட்டுமே தோற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இருப்பினும் அரையிறூதியில் தோற்றதால் வெளியேறிது. இதன் பிறகு பிசிசிஐ, தலைமை பயிற்சியாளர் பதவிக்கும், மற்ற அதிகாரிகள் பதிவிக்கும் புதிய ஆட்களை நியமிக்க வேண்டுமென்பதால், விருப்பம் உள்ளவர்களை விண்ணபிக்க சொன்னது. இந்திய அணியில் முன்னாள் ஆல் ரவுண்டர் ராபின் சிங், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். இப்போது அவர், ரவி சாஸ்திரி தலைமையில் தான் இந்தியா, " தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றது" என்றார். 

"அவர் தலைமையில், இந்திய அணி தொடர்ச்சியாக உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றது மற்றும் உலகக் கோப்பை டி20 போட்டியில் கடைசி நான்கு போட்டிகளிலும் தோற்றது. 2023 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயாராக வேண்டிய நேரமிது. அதனால், மாற்றமும் தேவைப்படுகிறது," ராபின் சிங் தெரிவித்தார்.

உலகக் கோப்பை நடந்து கொண்டிருந்த போது, ரவி சாஸ்திரி மற்றும் மற்ற பயிற்சியாளர்கள் அனைவருக்கும் 45 நாட்கள் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

ஜூலை 16ம் தேதி பிசிசிஐ, தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு விண்ணபிக்க கேட்டுக்கொண்டது. 

"இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் (சீனியர்) தானாகவே இந்த தேர்வு முறையில் இடம்பெறுவார்," பிசிசிஐ தெரிவித்தது.

இந்தப் பதவிகளுக்கு விண்ணபிக்க ஜூலை 30ம் தேதி மாலை 5 மணி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறியது
  • மழை காரணமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டி இரண்டு நாள் நடந்தது
  • தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து பேசிய ராபின் சிங்
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
"தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு எடுக்கக்கூடும்" - ரவி சாஸ்திரி!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை... இந்திய vs ஆஸி .தொடரில் கவனிக்க வேண்டிய வீரர்கள்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்!
ரவி சாஸ்திரி, பங்களாதேஷ் பயிற்சியாளர் நேரடியாக ஈடன் கார்டனுக்கு சென்றனர்!
Advertisement