"இந்தியா புதிய உயரங்களை எட்டும்" - மோடிக்கு கோலியின் வாழ்த்து!

Updated: 24 May 2019 18:12 IST

மே 30 துவங்கும் உலகக் கோப்பை தொடரில் ஜூன் 5ம் தேதி முதல் ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது.

Election Results 2019: Virat Kohli Congratulates PM Modi
விராட் கோலி  இந்திய மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். © Twitter @PIB_India

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி  இந்திய மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "உங்கள் ஆட்சியில் இந்திய புதிய உயரங்களை எட்டும்" என்று தான் நம்புவதாக வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தனிப்பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மோடி.

தனது தொடர் ட்விட்டுகள் மூலம் அரசை திறம்பட தொடரவுள்ளதாகவும், புதிய இந்தியாவை உருவாக்குவதாகவும் மோடி தெரிவித்தார்.

மேலும் மோடி ''நாட்டு மக்களுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்வதே தனது முதல் வேலை என்று குறிப்பிட்டார். பாஜக தலைமையிலான என் டிஏ கூட்டணி அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது" என்றார்.

முன்னதாக இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மோடிக்கு வாழ்த்தி தெரிவித்தார். அதில் மோடிக்கு வாழ்த்துக்களை குறிப்பிட்ட சச்சின், வலிமையான இந்தியாவை உருவாக்க உங்களுக்கு உதவுவோம்" என்று கூறியிருந்தார்.

அதற்கு மோடி நன்றியும் தெரிவித்துள்ளார். இணைந்து சிறந்த நாட்டை உருவாக்குவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

மே 30 துவங்கும் உலகக் கோப்பை தொடரில் ஜூன் 5ம் தேதி முதல் ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • கேப்டன் விராட் கோலி நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
  • ஜூன் 5ம் தேதி முதல் ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது
  • இந்தியா பிரதமராக தனிப்பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மோடி
தொடர்புடைய கட்டுரைகள்
"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்
"விராட் கோலி பாராட்டுதலுக்குரியவர்" - ஸ்மித் புகழாரம்
"பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா உணர்ச்சிவசத்தோடு அணுகுவதில்லை" -கேப்டன் கோலி
"பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா உணர்ச்சிவசத்தோடு அணுகுவதில்லை" -கேப்டன் கோலி
நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!
நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!
உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!!
உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!!
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
Advertisement